சினிமா செய்திகள்
எந்த ஓடிடியில் ‘தலைவி’ ரிலீஸ்: சற்றுமுன் கிடைத்த தகவல்!

இயக்குனர் விஜய் இயக்கத்தில் அரவிந்த்சாமி, கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாக்கிய திரைப்படம் ‘தலைவி’. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாna இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து இருந்தார் என்பது தெரிந்ததே.
இந்த படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீசை எதிர்பார்த்து அனைவரும் காத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘தலைவி’ திரைப்படம் ஏப்ரல் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திரையரங்கில் ரிலீஸ் ஆன பிறகு ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து ஓடிடியில் இந்த படம் ரிலீசாகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் நிறுவனமும் ஹிந்தி ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.















