சினிமா செய்திகள்
‘வலிமை’-யில் தல அஜித்தின் இன்ட்ரோ எப்படி இருக்கும்..? – இயக்குநர் எச்.வினோத் கொடுத்த மாஸ் அப்டேட்

அல்டிமேட் ஸ்டார் ‘தல’ அஜித் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் திரைப்படம் ‘வலிமை’. இந்தப் படத்தில் அஜித்தின் இன்ட்ரோ எப்படி இருக்கும் என்பது குறித்து படத்தின் இயக்குநர் எச்.வினோத் கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக வலிமை படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்தப் படம் மெகா ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து இந்தக் கூட்டணியின் அடுத்தப் படைப்பாக வலிமை உருவாகி வருகிறது.
கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் விறுவிறுப்பாக நடந்து வரும் வலிமை படத்தின் ஷூட்டிங் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ளதாம். வெளிநாடுகளில் படமாக்க வேண்டிய சில காட்சிகள் மட்டும் இன்னும் பாக்கி உள்ளதாக படக்குழுத் தரப்பு தகவல் சொல்கிறது. இந்நிலையில் அனைத்து போஸ்ட் புரொடெக்ஷன் பணிகளையும் முடித்து, வரும் ஏப்ரல் மாதம் ‘வலிமை’ திரைப்படத்தை வெள்ளித்திரையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறது. அதே நேரத்தில் போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஆகஸ்ட் இரண்டாவது வாரம் படம் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
அஜித் ரசிகர்கள், ‘படம் சீக்கிரம் வரலைனாலும் பரவாயில்ல. அப்பப்போ அப்டேட் மட்டுமாவது கொடுங்க’ என்று வினோத், போனி கபூரிடம் கெஞ்சி வருகின்றனர்.

இந்த நிலையில் படத்தின் இயக்குநர் வினோத், ‘நீங்கள், யுவன் சங்கர் ராஜாவின் பீட்ஸ்களையும், அஜித் சாரின் அதிரடியையும் வலிமை இன்ட்ரோ பாடலில் பார்ப்பீர்கள். காத்திருங்கள்’ என்று தெரிவித்துள்ளார். இந்த அப்டேட்டால் தல ரசிகர்கள் குஷி மோடில் இருக்கின்றனர்.
You will see @thisisysr ‘s Beats & Ajith Sir’s Rage on Valimai Intro Song! Wait for it ????????#Valimai
— HVinoth (@HvinothDir) February 10, 2021





















