செய்திகள்
மீண்டும் பதட்டம்.. கருணாநிதியை சந்திக்க வரும் குடும்பத்தினர்.. காவேரியில் கூடும் தொண்டர்படை

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டு இருக்கும் காவேரி மருத்துவமனைக்கு அவரை சந்திக்க மீண்டும் அவரது உறவினர்கள் அதிக பேர் வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நல்ல உடல்நிலையில் இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை மிகவும் நல்ல நிலையை அடைந்துள்ளது.
ஆனால் அவரது உடல்நிலையில் சிறிய சுணக்கம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம் முழுக்க திமுக தொண்டர்கள் இடையே மீண்டும் பதட்டம் நிலவுகிறது.

கருணாநிதியை சந்திக்க வரும் குடும்பத்தினர்
முக்கியமாக, தற்போது காவேரி மருத்துவமனைக்கு மீண்டும் கருணாநிதி உறவினர்கள் அதிக பேர் வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது. ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோர் அங்கு குவிந்து இருக்கிறார்கள்.
அதேபோல் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் முதல்முறையாக மருத்துவமனைக்கு வருகிறார். அதேபோல் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இது அங்கு பெரிய பதட்டத்தை உருவாக்கி உள்ளது.




















