Connect with us

இந்தியா

நிம்மதியாக வேலை பார்ப்பது டிசிஎஸ் ஊழியர்கள் மட்டும் தான்.. இன்ப அதிர்ச்சி அறிவிப்பு..!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் உலகில் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பொருளாதார மந்தநிலை உள்பட பல்வேறு காரணங்களால் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன. கடந்த ஆண்டு வேலை நீக்க நடவடிக்கை தொடங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு உச்சத்திற்கு சென்றது என்பதும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் முன்னணி நிறுவனங்களில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

கூகுள், மைக்ரோசாப்ட், ட்விட்டர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்ததால் அந்த நிறுவனங்களில் பணி செய்து கொண்டிருக்கும் ஊழியர்கள் எந்த நேரத்திலும் நாம் வேலை நீக்கம் செய்யப்படுவோம் என்ற அச்சத்துடனே வேலை செய்து வருகின்றனர். ஆனால் டிசிஎஸ் நிறுவனத்தில் பணி செய்து கொண்டிருக்கும் ஊழியர்கள் மட்டும் நிம்மதியாக வேலை நீக்க பயமின்றி வேலை செய்வதோடு கூடுதல் சம்பளமும் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

 

ஆம் டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வை விரைவில் அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் விரைவில் ஊழியர்களின் சம்பள உயர்வை அறிவிக்கும் என அந்நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரித்து மிலிந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்.

’நாங்கள் எங்கள் ஊழியர்களின் திறமையை நம்புகிறோம் என்றும் பணி நீக்கங்கள் என்பது எங்கள் நிறுவனத்தில் எந்த காரணத்தை முன்னிட்டும் இருக்காது என்றும் அதுமட்டுமின்றி மற்ற நிறுவனங்களில் வேலை இழந்த ஊழியர்களையும் வேலைக்கு அமர்த்த விரும்புகிறோம் என்றும் மிலிந்த் தெரிவித்துள்ளார்.

வேலை நீக்க நடவடிக்கைகளை நாங்கள் நம்புவதில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் திறமையானவர்களை வளர்ப்பதில் நாங்கள் ஈடுபடுகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். வேலைநீக்க நடவடிக்கை குறித்து அவர் கூறிய போது பல நிறுவனங்கள் தேவைக்கு அதிகமாக ஊழியர்களை வேலைக்கு எடுத்ததால்தான் தற்போது பணி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன என்றும் ஒரு ஊழியரை எடுத்தால் அந்த ஊழியரின் திறமை முழுவதையும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவதில் கவனம் செலுத்தினால் வேலைநீக்க நடவடிக்கை என்பது இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு, வடிவமைப்பு, கிளவுட் உள்பட பல அம்சங்களில் எதிர்காலத்தில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அதற்காக திறமையானவர்களை நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம் என்றும் விரைவில் புதிய பணியமர்த்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி எங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட அறிவிப்புகளையும் விரைவில் வெளியிட இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

இதனை அடுத்து உலகிலேயே டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிய ஊழியர்கள் தான் வேலை நீக்க பயமின்றி நிம்மதியாக பணி செய்து வருகின்றனர் என கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் திருத்தம் எஸ்.ஐ.ஆர். முடிந்தது – வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படும்.

இந்தியா4 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 19.12.2025

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 டிசம்பர் 2025 (வெள்ளிக்கிழமை)

இந்தியா20 மணி நேரங்கள் ago

டீ டைம் நியுஸ் பைட்ஸ் – 18.12.2025

இந்தியா23 மணி நேரங்கள் ago

சென்னையில் மூத்த குடிமக்களுக்கு டிசம்பர் 21ம் தேதி முதல் கட்டணமில்லா பயண அட்டை அறிமுகம்

இந்தியா24 மணி நேரங்கள் ago

ஜல்லிக்கட்டு 2026 – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

செய்திகள்1 நாள் ago

அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற டிசம்பர் 22ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 18.12.2025

ஆட்டோமொபைல்2 நாட்கள் ago

வாகன புதுப்பிப்பு சான்று பெற கட்டணம் 15 மடங்கு அதிகரிப்பு – லாரி உரிமையாளர்கள் குமுறல்

இந்தியா2 நாட்கள் ago

டீ டைம் நியுஸ் பைட்ஸ் – 17.12.2025

வணிகம்6 நாட்கள் ago

“SBI FD வட்டி குறைப்பு: டிசம்பர் 15க்கு முன் முதலீடு செய்தால் கூடுதல் வட்டி கிடைக்கும்!”

வணிகம்6 நாட்கள் ago

“8வது ஊதியக்குழு அமலானால் சம்பளம் எவ்வளவு உயரும்? 1.92 & 2.57 ஃபிட்மெண்ட் ஃபாக்டர் கணக்கீடு”

கட்டுரைகள்6 நாட்கள் ago

நீங்கள் சீக்கிரம் பணக்காரர் ஆக வேண்டுமா? இதை டிரை பண்ணிப்பாருங்க!!!

இந்தியா5 நாட்கள் ago

ஜி.எஸ்.டி.பில் செலுத்துபவரா நீங்கள்? இகேஒய்சி சரிபார்த்தீர்களா? உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படலாம்!!!!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: ஜனவரி 2026 முதல் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (DR) உயருமா? முழு விளக்கம்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் 42% நிறைவு; 2026 அக்டோபரில் முழுமையாக செயல்பட இலக்கு

வணிகம்6 நாட்கள் ago

“Pension News 2025: மூத்த குடிமக்களுக்காக அமலான 10 முக்கிய அரசு மாற்றங்கள்”!

வணிகம்6 நாட்கள் ago

“8வது ஊதியக்குழு அமலாக்கம்: 2026 பட்ஜெட்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அறிவிப்பு வருமா?”

வணிகம்6 நாட்கள் ago

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு புதிய உத்தரவு: இனி மாதந்தோறும் ஓய்வூதிய பட்டுவாடா சீட்டு கட்டாயம்!

வணிகம்7 நாட்கள் ago

“பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை எப்போது எவ்வளவு எடுக்கலாம்? EPFO விதிமுறைகள் விளக்கம்”!

Translate »