பங்கு சந்தை
டாடா பவர் – NTPC ஒப்பந்தம்: நாளை பங்குச் சந்தையில் கவனிக்கும் முக்கிய பங்கு!

டாடா குழுமத்தின் முக்கிய நிறுவமான டாடா பவர், தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்காக NTPC லிமிடெட் நிறுவனத்துடன் மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் (PPA) கையெழுத்திட்டுள்ளது. இதன் விளைவாக, ஏப்ரல் 15 செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் டாடா பவர் பங்கு கவனத்திற்கு வரும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், 200 மெகாவாட் அனுப்பக்கூடிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (FDRE) திட்டம் உருவாக்கப்படும். இதன் மூலம், டாடா பவரின் மொத்த பசுமை எரிசக்தி திறன் 10.9 GW ஆக உயர்ந்துள்ளது. இதில் 5.5 GW திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. மேலும் 5.4 GW திட்டங்கள் உருவாக்கத்திற்குள் உள்ள நிலையில் உள்ளன.
இந்த செயல்திறன் வளர்ச்சியில்,
4.5 GW சூரிய சக்தி,
1 GW காற்றாலை ஆற்றல் தற்போது செயல்பாட்டில் உள்ளன.
அத்துடன், புதிய திட்டங்களில் 2.7 GW சூரிய சக்தி மற்றும் 2.7 GW காற்றாலை என சமமாகப் பகிரப்பட்டுள்ளது.
அடுத்த 6 முதல் 24 மாதங்களில் இந்த புதிய திட்டங்கள் நிலைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிறுவத்தின் வளர்ச்சித் திட்டங்களை வலுப்படுத்தும்.
மேலும், மகாராஷ்டிராவில் 100 மெகாவாட் BESS (Battery Energy Storage System) அமைப்பதற்கான ஒப்புதலை MERC வழங்கியுள்ளது. அதேபோல், ஆந்திர அரசுடன் 7,000 மெகாவாட் பசுமை ஆற்றல் திட்டங்களை மேம்படுத்த ரூ.49,000 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2025ல், டாடா பவரின் TP சோலார் லிமிடெட், 292.5 MWp DCR சூரிய மின் தொகுதி வழங்க SECI நிறுவனத்திடமிருந்து ரூ.632 கோடி ஒப்பந்தம் வென்றுள்ளது.
ஏப்ரல் 11, 2025 அன்று, டாடா பவர் பங்கு 1.86% உயர்ச்சியுடன் ரூ.364.90 ஆக வர்த்தகமானது. அதன் 52 வார உயர்வான விலை ரூ.494.85, மற்றும் குறைந்த விலை ரூ.326.35 ஆக பதிவாகியுள்ளது.


