Connect with us

தமிழ்நாடு

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம்: பல்கலையின் முக்கிய அறிவிப்பு!

Published

on

B.V.Sc,B.Tech ஆகிய கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு சேருவதற்கு இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

இன்று முதல் வரும் அக்டோபர் 8ஆம் தேதி வரை tanuvas.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் கால்நடை படிப்புகளுக்கு சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

2021-2022 ஆம்‌ கல்வியாண்டிற்கான (கால்நடை மருத்துவம்‌ மற்றும்‌ கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (B.V.Sc & AH), உணவுத்‌ தொழில்நுட்ப பட்டப்படிப்பு (BTech- Food Technology), கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (BTech Poultry Technology)) மற்றும்‌ பால்வளத்‌ தொழில்நுட்ப பட்டப்படிப்பு (BTech Dairy Technology) ஆகிய இளநிலை பட்டப்படிப்புகளின்‌ சேர்க்கைக்கு தமிழ்நாட்டைச்‌ சார்ந்த மாணவர்களிடமிருந்து 09.09.2021 காலை 10.00 மணி முதல்‌ 08.10.2021 மாலை 6.00 மணி வரை இணையதளம்‌ மூலமாக விண்ணப்பங்கள்‌ (online application) வரவேற்கப்படுகின்றன.

அயல்நாடு வாழ்‌ இந்தியர்‌ (NRIs) / அயல்நாடு வாழ்‌ இந்தியரின்‌ குழந்தைகள்‌ (Wards of NRIs)/ அயல்நாடு வாழ்‌ இந்தியரின்‌ நிதி ஆதரவு பெற்றோர்‌ (NRI sponsored) மற்றும்‌ அயல்நாட்டினர்‌ (Foreign National) மாணவர்கள்‌ 09.09.2021 காலை 10.00 மணி முதல்‌ 08.11.2021 மாலை 6.00 மணி வரை இணையதளம்‌ மூலமாக விண்ணப்பங்களை (online application) சமர்ப்பிக்கலாம்‌.

இணையதள விண்ணப்பங்கள்‌ மட்டுமே ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌. தகவல்‌ தொகுப்பேடு, சேர்க்கைத்‌ தகுதிகள்‌, தேர்வு செய்யப்படும்‌ முறை மற்றம்‌ இதர விவரங்களை www.tanuvas.ac.in மற்றும்‌ www2.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளங்களில்‌ காணலாம்‌.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
carrd charges for essential features like forms and custom domains.