இந்தியா
கொரோனா தடுப்பூசியை அதிகம் வீண் செய்த மாநிலம் தமிழ்நாடு.. அதிர்ச்சி தகவல்!

இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோண் தடுப்பூசியை ஜனவரி மாதம் அதிகம் வீரியம் செய்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 12.10 சதவீதமும், ஹரியானாவில் 9.74 சதவீதமும், பஞ்சாபில் 8.12 சதவீதமும், மணிப்பூரில் 7.8 சதவீதமும், தெலுங்கானாவில் 7.55 சதவீதமும் கொரோனா தடுப்பூசி வீரியம் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 11-ம் தேதி வரையில் 10 கோடி கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்பட்டுள்ள நிலையில், 44 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வீரியம் செய்யப்பட்டுள்ளது.
கேரளா, மேற்கு வங்கம், இமாசல பிரதேசம், மிசோரம், கோவா, அந்தமான், லக்ஷதீப், டேமன் & டியு உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனா தடுப்பூசியைக் குறைந்த அளவில் வீரியம் செய்துள்ளன.
குஜராத்துடன் ஒப்பிடும் போது மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப் மாநிலங்கள் மக்கள் தொகை அதிகம். இருந்தாலும் குறைந்த அளவில் தான் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொரோணா தடுப்பூசி உற்பத்தியை நிறுவனங்கள் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக திங்கட்கிழமை கூடுதலாக 4,500 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மேலும் அண்மையில் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் கொரோனா தடுப்பூசிக்கும் இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

4,500 கோடி ரூபாயில் சீரம் நிறுவனத்துக்கும் 3 ஆயிரம் கோடி ரூபாயும், பாரத் பையோடெக் நிறுவனத்துக்கு 1,500 கோடி ரூபாயும் மத்திய அரசு அளிக்கிறது. இந்த தொகையைப் பயன்படுத்தி இரண்டு நிறுவனங்களும் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும்.

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டுக்குக் காரணம் சரியாகத் திட்டமிடாததே காரணம். பெரிய மாநிலங்களுக்கு 4 நாட்கள் ஒரு முறையும், சிறிய மாநிலங்களுக்கு 7-8 நாட்களுக்கு ஒரு முறையும் கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் சென்ற வாரம் தெரிவித்து இருந்தார்,. கொரோனா தடுப்பூசி வீரியம் ஆவதை தவிர்க மாநில அரசுகள் குளிர்சாதன கூடங்களை அமைக்க வேண்டும் என்றும் அவர் கூறி இருந்தார்.
இந்தியாவில் ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி வழங்கல் பணி நடைபெற்று வருகிறது. இப்போது 45 வயதுக்கு அதிகமானவர்களுக்கும், தேவை அதிகம் உள்ளவர்களுக்கும், மருத்துவ பணியாளருக்கும், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





















