வேலைவாய்ப்பு
தமிழ்நாடு ஊராட்சி செயலர் வேலைவாய்ப்பு 2025 – 1,450 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியீடு!
Published
3 வாரங்கள் agoon
By
Poovizhi
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 1,450 கிராம ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://www.tnrd.tn.gov.in/ மூலம் நேரடியாக செய்யலாம்.
பணியிட விவரம்:
பதவி: கிராம ஊராட்சி செயலர்
காலிப்பணியிடங்கள்: 1,450
வயது வரம்பு:
பொதுப்பிரிவு: 18 – 32
பிற்படுத்தப்பட்ட வகுப்பு / பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் / சீர் மரபினர்: 18 – 34
ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்தியர்), பட்டியல் பழங்குடியினர், ஆதரவற்ற விதவை: 18 – 37
மாற்றுத்திறனாளிகள்: அதிகபட்ச வயது வரம்பில் 10 ஆண்டு நீட்டிப்பு
முன்னாள் ராணுவ வீரர்கள்: 18 – 50
பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற குறைந்த வர்க்கங்கள் முன்னாள் ராணுவ வீரர்கள்: 18 – 55
கல்வித்தகுதி:
குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி.
குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு வரை தமிழ் மொழியில் படித்திருக்க வேண்டும்.
சம்பளம்:
ரூ.15,900 – ரூ.50,400 (நிலை 2)
விண்ணப்ப நேரம்:
விண்ணப்ப தொடக்கம்: 10.10.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.11.2025
விண்ணப்பச் சலுகை மற்றும் ஆவணங்கள்:
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 (பொதுப்பிரிவு), ரூ.50 (ஆதிதிராவிடர், பட்டியல் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள்)
தேவையான ஆவணங்கள்: கல்வி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், பிற அடிப்படை ஆவணங்கள்
தேர்வு செயல்முறை:
விண்ணப்ப சரிபார்ப்பு: 10.11.2025 – 24.11.2025
தகுதி வாய்ந்தவர்கள் பட்டியல்: 25.11.2025 – 03.12.2025
நேர்காணல்: 04.12.2025 – 12.12.2025
தேர்வு முடிவுகள்: 15.12.2025 – 16.12.2025
பணி நியமன ஆணை: 17.12.2025
10-ம் வகுப்பு தகுதிபெற்றவர்கள், அரசு பணியை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாகும். ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக உடனே விண்ணப்பிக்கலாம்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.














