வணிகம்
தமிழக அரசு மின்சார இருசக்கர வாகனத்திற்கு ரூ.20,000 மானியம்: யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
தமிழக அரசு மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், புதிய மானிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, உணவு டெலிவரி, பைக் டாக்ஸி போன்ற சேவையில் இருக்கும் இளைஞர்கள் மின்சார இருசக்கர வாகனம் வாங்க ரூ.20,000 மானியம் பெறலாம்.
இதற்கு முன்பு ‘அம்மா இருசக்கர வாகனத் திட்டம்’ மூலம் பணிபுரியும் பெண்களுக்கு மானியம் வழங்கப்பட்ட நிலையில், தற்போதைய மின்சார வாகன மானியம் திட்டம் டெலிவரி பாய்ஸ் மற்றும் கிக் தொழிலாளர்களுக்கு உகந்ததாகும்.
யார் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாடு இணைய அடிப்படையிலான கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்திருப்பவர்கள்.
உணவு டெலிவரி, பைக் டாக்ஸி போன்ற இணைய அடிப்படையிலான வேலை செய்யும் இளைஞர்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
முதலில் https://tnuwwb.tn.gov.in/ என்ற தளத்தில் நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பின்னர், அதே தளத்தில் நலவாரிய பதிவு எண்ணை வைத்து மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்:
பணியிடம் சான்றிதழ்
ஓட்டுநர் உரிமம்
ஆதார், முகவரி சான்று
இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம்.
மின்சார வாகன வளர்ச்சி தமிழ்நாட்டில்:
தமிழ்நாடு, இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி மையமாக உருவெடுத்துவருகிறது. ஓலா எலக்ட்ரிக், ஆதர் எலக்ட்ரிக் போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன.
மேலும், சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்பதற்கும் 25% மானியம், அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படுகிறது. பொதுமக்கள் மத்திய அரசு FAME II, மாநில அரசு மானியத்துடன் மின்சார வாகனங்களை குறைந்த விலையில் வாங்கலாம்.
உதாரணமாக, ரூ.1,15,000 மதிப்புள்ள ஸ்கூட்டரை மானியத்துடன் ரூ.80,000 முதல் ரூ.90,000 வரை குறைந்த விலையில் பெறலாம்.
“தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் (Gig) தொழிலாளர்கள் நல வாரியம் (Tamil Nadu Platform Based Gig Workers Welfare Board)” எனும் புதிய நலவாரியத்தை தோற்றுவித்து ஆணை பிறப்பித்துள்ளது தமிழ்நாடு அரசு. pic.twitter.com/7PlW7IacFa
— DMK IT WING (@DMKITwing) December 27, 2023
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.
