செய்திகள்
தமிழ்நாடு அரசு அறிவிப்பு: 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1000 உதவித்தொகை – உடனே விண்ணப்பிக்கவும்!
Published
12 மாதங்கள் agoon
By
Poovizhi
தமிழ்நாடு அரசு, பள்ளிகளில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், 12ஆம் வகுப்பு முடிக்கும் வரை ஆண்டுதோறும் இந்த உதவித்தொகையை பெறலாம்.
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்காக ஏற்கனவே பல நலத்திட்டங்களை — புத்தகம், சீருடை, இலவச பேருந்து பயணம், மதிய உணவு போன்றவற்றை — செயல்படுத்தி வருகிறது. அதேபோல், சிறப்பாக படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த கல்வி உதவித்தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
🔹 திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
இந்த உதவித்தொகை தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வின் அடிப்படையில் வழங்கப்படும்.
9ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்கலாம்.
தேர்வு 29 நவம்பர் 2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் நான்கு ஆண்டுகள் (9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை) வழங்கப்படும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் ஐ விட அதிகமாக இருக்கக் கூடாது.
🔹 விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளம்
👉 www.dge.tn.gov.in
மூலம் 28.10.2025 முதல் 04.11.2025 வரை பதிவிறக்கம் செய்யலாம்.தேர்வுக் கட்டணமாக ரூ.10/- செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளித் தலைமையாசிரியர் / முதல்வரிடம் ஒப்படைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04 நவம்பர் 2025.
🔹 யார் விண்ணப்பிக்கலாம்:
தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்.
சென்னை மாவட்ட மாணவர்கள் இதில் பங்கேற்க முடியாது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.
