Connect with us

செய்திகள்

அங்கன்வாடி ஊழியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை – சட்டவிரோத போராட்டம் நடத்தியால் நடவடிக்கை உறுதி!

Published

on

அங்கன்வாடி ஊழியர்களுக்கு தமிழக அரசின் கடும் எச்சரிக்கை – குழந்தைகள் நலனுக்கு எதிரான செயல்கள் விட்டமனப்படும்!

தமிழ்நாடு அரசு, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, முன்னறிவிப்பு இல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுவது குழந்தைகள் நலனுக்கு எதிரான செயலாகும் என கடும் எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 2, 2025 முதல் அனைத்து மாவட்ட திட்ட அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்களெனவும், இதனால் மத்திய அரசு திட்டங்களில் பயனடையும் ஏழை, எளிய குழந்தைகள் மதிய உணவு, முட்டை, சத்துமாவு உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவுகளை பெற முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள் என வருத்தம் தெரிவித்தார்.

அத்துடன், மே 11 முதல் 25 வரை, அரசு அறிவித்துள்ள 15 நாட்கள் கோடை விடுமுறை பெற்ற பிறகும் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். உணவு பாதுகாப்பு சட்டம் 2013-ன் கீழ் 300 நாட்கள் குழந்தைகள் மையம் செயல்பட வேண்டும் என்பது கட்டாயமாக இருக்கின்றது.

2022 முதல் தமிழக அரசு சம்பளத்துடன் கூடிய மே மாத விடுமுறையை அமல்படுத்தி வருகிறது என்றும், அந்த விடுமுறை நாட்களில் உணவுப் பொருட்கள், சத்துமாவுகள் முதலியவை THR (Take Home Ration) முறையில் குழந்தைகளுக்கு வீடு தேடிச் சென்று வழங்கப்படுவதையும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பதவி உயர்வு, பணியாளர் நலன், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் அரசு ஏற்கனவே நிறைவேற்றியுள்ளதாகவும், இந்நிலையில் சட்ட விரோத போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு கண்டிப்பான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் உறுதியாக எச்சரித்துள்ளார்.

    Translate »
    discover luxury gulets, motor yachts, and catamarans in bodrum, gocek, marmaris, and fethiye.