சினிமா செய்திகள்
என் மகன் சிம்புவுக்கு பெண் பார்க்க அவர் ஒருவரால் தான் முடியும்: டி ராஜேந்தர் பேட்டி

நடிகர் சிம்புவுக்கு கிட்டதட்ட 40 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகாத நிலையில் அவரது குடும்பத்தினர் கடந்த சில ஆண்டுகளாக பெண் பார்த்து வருவதாக செய்திகள் வெளியானது.
இதனை அடுத்து சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் என் மகனுக்கு பெண் பார்க்கும் திறமை ஒரே ஒருவருக்கு மட்டுமே உண்டு என்று சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் பேட்டி அளித்துள்ளார்.
நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்தர் நேற்று காஞ்சிபுரம் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் பிரசாதங்களை அளித்தனர். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, என் மகனுக்கு நானோ என் மனைவியோ அல்லது வேறு யாரோ பெண் பார்ப்பதைவிட இறைவன் தான் பெண் பார்க்க வேண்டும்.
என் மகனுக்கு பொருத்தமான திருமகளை, கலைமகளை, குணமகளை என் வீட்டு மருமகளை இறைவன் தான் பார்க்க வேண்டும்.அவர் சிம்புவுக்கு சரியான ஒரு மணமகளை பார்ப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் என்னை இந்த அளவுக்கு ஆளாக்கிய ரசிகர்களுக்கும் என் மகனுக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் இதனை அடுத்து சிம்பு திருமணம் இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.