சினிமா செய்திகள்
இன்று முதல் படப்பிடிப்பு தொடக்கம்: அதிகாரபூர்வமாக அறிவித்தார் சூர்யா!

இன்று முதல் சூர்யாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாக தொடங்குவதாக சூர்யா தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாலா இயக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் சூர்யா-பாலா இணையும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாக சூர்யாவின் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூர்யா மற்றும் பாலா இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
இன்று தொடங்கும் சூர்யா-பாலாவின் படப்பிடிப்பு மூன்று மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் சூர்யா நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஒத்திகை படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Been waiting for #DirBala na my mentor to say Action!!! …After 18 years, it’s happiness today…! This moment… we need all your wishes! #Suriya41 pic.twitter.com/TKwznuTu9c
— Suriya Sivakumar (@Suriya_offl) March 28, 2022



















