சினிமா
எனக்கு ஒரு பாலிவுட் நடிகை பத்தாது; இன்னொரு பாலிவுட் நடிகையும் வேணும்! அடம்பிடிக்கும் சூர்யா?

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சிஜி வேலைகள் அதிகம் கொண்ட 3டி படமாக சூர்யா 42 உருவாகி வருகிறது. அண்ணாத்த படத்துலயே அத்தனை லாரிகளை விஎஃபெக்ஸ் காட்சியில் பறக்கவிட்டு படத்தை படுக்க வைத்து விட்டார். சூர்யா 42 படத்தில் பெரிய சம்பவம் செய்ய காத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஒன்னுக்கு இரண்டு ஹீரோயின் இருந்தா படத்துக்கு பெரிய பிளஸ் ஆக இருக்கும் என சூர்யா தன் பங்கிற்கு ஒரு பிட்டை போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

#image_title
7ஆம் அறிவு படத்தில் ஸ்ருதிஹாசன் எப்படி இருந்தாரோ அதே போல ஒல்லி பெல்லியாக பிகினி பேபி நடிகை வேண்டும் என தேடி அலசிய நிலையில், திஷா பதானியை டிக் செய்திருந்தார் சூர்யா.
கடந்த ஆண்டு சீதா ராமம் படத்தை பார்த்ததில் இருந்தே “ஏய் சீதா” என நடிகை மிருணாள் தாகூர் மீது ஒரு வித மயக்கம் கொண்டிருக்கும் சூர்யா திஷா பதானி மட்டும் வேண்டாம் மிருணாள் தாகூரையும் ஒரு ஹீரோயினாக போடுங்க என கோரிக்கை வைத்த நிலையில், அரசர் கெட்டப்பில் காட்டப்பட்ட பீரியட் போர்ஷன் சூர்யாவுக்கு திஷா பதானியையே நடிக்க வைக்காமல் மிருணாள் தாகூரை நடிக்க வைக்க இயக்குநர் சிறுத்தை சிவா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறுகின்றனர்.

#image_title
விரைவில் சூர்யா 42 படத்தில் மிருணாள் தாகூர் ஆன்போர்ட் ஆகும் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அந்த வணங்கான் படத்தில் நடித்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.