சினிமா
விக்னேஷ் சிவனை விரட்டி விட்ட அஜித்; இனிமே நம்பர் ஒன் ஆவது தான் லட்சியமா?

அஜித் எனக்கு ரொம்பவே ஃப்ரீடம் கொடுத்திருக்காருன்னு சமீபத்தில் நடந்த ரவுண்ட் டேபிள் பேட்டியில் கெத்தாக பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவனை ஏகே62 படத்தில் இருந்தே நடிகர் அஜித் விரட்டி விட்டதாக திரையுலகமே மிரண்டு போகும் அளவுக்கு பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மனைவி நயன்தாராவால் கிடைத்த வாய்ப்பை வழக்கம் போல அசால்ட்டாக எடுத்துக் கொண்டு எப்படி கிண்டிக் கொடுத்தாலும் அஜித் கதையே கேட்காமல் நடிக்கப் போகிறார் என நினைத்து விட்டார் போல விக்னேஷ் சிவன்.

#image_title
இயக்குநர் எச். வினோத் அஜித் கதையே கேட்க மாட்டார், படத்தையே பார்க்க மாட்டார் என சொன்ன கதைகளை எல்லாம் நம்பி ஜாலியாக மனைவி மற்றும் குழந்தைகளை கொஞ்சிக் கொண்டிருந்த விக்னேஷ் சிவனின் தலையில் இடியை தூக்கிப் போட்டது போல லைகாவும் நடிகர் அஜித்தும் நீங்க வீட்டிலேயே ஜாலியா இருங்க பாஸ் என துரத்தி அடித்து விட்டதாக கூறுகின்றனர்.
எப்படியாவது பொங்கல் ரேஸில் விஜய்யின் வாரிசு படத்தை வசூலில் முந்த வேண்டும் என நினைத்த அஜித்துக்கு அவர் நினைத்தது நடக்கவில்லை என்கிற மன வருத்தம் எழுந்த நிலையில், அடுத்த படத்தையாவது தளபதி 67 படத்துடன் போட்டியாக செல்லும் படமாக இருக்க நினைத்திருக்கிறார்.

#image_title
ஆனால், ஆரம்பத்தில் சமையல் ஓனர் கதையை அஜித்துக்கு சொல்லி பிடிக்காத நிலையில், உடனடியாக மும்பை கேங்ஸ்டர் என அடித்து துவைத்த கதையுடன் விக்னேஷ் சிவன் அஜித்திடம் சென்ற நிலையில், புதுசா எந்த சரக்கும் இல்லையா தம்பி இந்த பக்கம் இனி வராதீங்க என விரட்டி அடித்து விட்டதாக கோடம்பாக்கத்தில் பலரும் கிண்டலாக பேசி வருகின்றனர்.
லைகா நிறுவனத்துக்கே போன் போட்டு நடிகை நயன்தாரா புருஷனுக்காக சிபாரிசு செய்தாலும், இது அஜித்தோட முடிவு நீங்க வேணா நேரடியா அவர்கிட்டேயே பேசுங்களேன் என போனை கட் பண்ணிட்டாங்களாம்.
துவண்டு கிடந்த இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு என்னை வைத்து இன்னொரு படத்தை பண்ணி ஹிட் அடிச்சிக்கோ, கவலைப்படாதே என ஆறுதல் சொல்லி உள்ளார் நயன்தாரா என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. வரும் பிப்ரவரி 3ம் தேதி தளபதி 67 அப்டேட் வெளியாகும் போதே அஜித்தின் ஏகே 62 படத்தை யார் இயக்கப் போகிறார் என்கிற அறிவிப்பை வெளியிட அஜித் திட்டமிட்டு இருக்கிறாராம். விஷ்ணு வர்தன் சல்மான் கானின் குடும்ப நபர் படத்தில் பிசியாக இருக்கும் நிலையில், இயக்குநர் மகிழ் திருமேனியை டைரக்டராக ஆக்கப் போவதாகவும் அவர் சொன்ன கதை ஏற்கனவே அஜித்துக்கு பிடித்த நிலையில் அந்த படத்தையே டிக் செய்துள்ளார் என்றும் கூறுகின்றனர்.