Connect with us

இந்தியா

தமிழ்நாடு போராடியது… தமிழ்நாடு வென்றது… ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு…- டெல்லியில் பர.. பர… ???

Published

on

தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்றது முதல் அந்த பதவிக்கு நியாயம் செய்யாமல் நடப்பதாக  விமர்சனத்திற்கு ஆளானார் ஆளுநர்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஒன்றுகூடி நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது மட்டுமே அவரது கடமை. ஒருவேளை மாற்றுக் கருத்து இருந்தால் அதுகுறித்து கட்டாயம் மாநில அரசிடம் கேள்வி எழுப்பலாம். ஆனால் அதே மசோதாவை திருத்தியோ, திருத்தாமலே சட்டப்பேரவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்து போட்டாக வேண்டும்.

ஆனால், தமிழ்நாடு அரசு அவ்வாறு மறுமுறை நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களை  எவ்வித காரணமும் இல்லாமல் கிடப்பில் போட்டுவிட்டு ஊருக்கெல்லாம் உபதேசம் செய்து கொண்டிருந்தார் ஆர்.என்.ரவி. இப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். “ஆளுநரின் செயல்பாடு நேர்மையாக இல்லை. 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதம்.

  • மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ரவியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை.
  • 2 வது முறையாக நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு அன்றே ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 200-ன் படியே ஆளுநர் செயல்பட வேண்டும். வெறுமனே மசோதாவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் கூற முடியாது. இனிமேல் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு ஒருமாதம் காலக்கெடு. மேல்நடவடிக்கை எடுக்க விரும்பினால் 3 மாதத்திற்குள் மசோதா மீது முடிவு எடுக்க வேண்டும்” என தீர்ப்பளித்துள்ளனர்.
  • முத்தாய்ப்பாகசிறப்புஅதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 
  • 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்துள்ளது.

அதில் முக்கியமான ஒரு மசோதா. இனிமேல் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு ஆளுநர், வேந்தர் அல்ல. முதலமைச்சர் தான் வேந்தராக செயல்பட முடியும்.

பேரறிவாளன் வழக்குக்கு பின்னர் ஆளுநர் வழக்கில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142ன் கீழ் உச்ச நீதிம்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் அதிரடியாக பயன்படுத்தியுள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுத்த  10 மசோதாக்கள்:-

1 சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

2 தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா

3 தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

4 தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

5 தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் திருத்த மசோதா

6 தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

  1. தமிழ் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா
  2. தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா
  3. அண்ணா பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா
  4. தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா

”ஒரு அரசியலமைப்பு எவ்வளவு நல்லதாக இருந்தாலும் அதனை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால் அது மோசமானதாகவே இருக்கும்” என்ற அண்ணல் அம்பேத்கரின் கூற்றை மேற்கோள் காட்டி தீர்ப்பினை நிறைவு செய்தார் நீதிபதி பர்திவாலா.

ஆளுநர் ஆர்.என்ரவிக்குஎதிரான உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கம் கிடைத்த மாபெரும் வெற்றி” என சட்டப்பேரவையில் பதிவு செய்தார் தமிழ்நாடு முதலமைச்சர்.

”அரசியல் சட்டத்துக்க விரோதமாக செயல்பட்டு வந்த ஆர்.என்.ரவி ஆளுநராக நீடிக்கக்கூடாது” என திராவிடர் கழக தலைவர் திரு.கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகிட பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. அவரை அப்பதவியிலிருந்து மாற்றிடுவதற்கான முயற்சிகளில் ஒன்றிய அரசு ஈடுபடத் தொடங்கியிருக்கிறது. அதேவேளையில் இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாகவும் சட்ட வல்லுனர்களுடன் ஒன்றிய அரசு ஆலோசனைகள் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒன்றிய-மாநில உறவுகளில் சமநிலையை மீட்டெடுப்பதில் இது மற்றொரு முக்கியமான படியாகும். உண்மையான கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவதற்கான தமிழ்நாட்டின் தொடர்ச்சியான போராட்டத்தில் ஒரு முக்கிய வெற்றியாகும். இந்த தீர்ப்பை பெற போராடிய மக்களுக்கும் வழக்கறிஞர் குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: புனர்பூசம் மாற்றம் – இந்த 5 ராசிகளுக்கு செல்வம், வெற்றி உறுதி!

school
செய்திகள்2 மணி நேரங்கள் ago

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 11 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: 100 ஆண்டுகளுக்கு பிறகு 5 ராஜயோகங்கள் – இந்த 4 ராசிகளுக்கு செல்வ வெள்ளம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: சூரியன்-சந்திரன் சேர்க்கையால் உருவாகும் அக்ஷய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா கணிப்பு 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணவரவு & வாழ்க்கை முன்னேற்றம்!

தொழில்நுட்பம்3 மணி நேரங்கள் ago

ஸ்கோடா கைலாக் மீது ரூ.75,000 வரை சலுகை: குறைந்த விலையில் பிரீமியம் SUV வாங்கும் வாய்ப்பு!

வணிகம்3 மணி நேரங்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

100 ஆண்டுகளுக்கு பிறகு மேஷத்தில் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்கள் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: சுக்கிரன் ரிஷபத்தில் நுழைவு – மாளவ்ய ராஜயோகம் உருவாகி இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

இந்தியா6 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

இந்தியா4 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

ஆன்மீகம்4 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2026 (திங்கட்கிழமை)

இந்தியா7 நாட்கள் ago

10 மணி நேர ‘டிஜிட்டல் கைது’ மோசடி: Flight Mode வைத்து பெற்றோரை காப்பாற்றிய 8ஆம் வகுப்பு மாணவன்

ஆன்மீகம்6 நாட்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: பெண்களுக்கு ரூ.10,000 கிடைக்குமா? முக்கிய அப்டேட் வெளியானது!

Translate »
At aaa mush love, we believe in the. Martinstools | professional saas tools for everyone. Heavy equipment transport lubbock tx.