வணிகம்
சுகன்யா சம்ரித்தி யோஜனா: உங்கள் மகளின் நிதி பாதுகாப்புக்கான சிறந்த சேமிப்பு திட்டம்!

சுகன்யா சம்ரித்தி யோஜனா என்பது இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டமாகும். இது 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்டது. பெற்றோர்கள் தங்கள் மகள்களின் எதிர்காலத்தை நிதியால் பாதுகாப்பாக மாற்ற விரும்பினால், இந்த திட்டம் சிறந்த தீர்வாக அமைகிறது.
இந்த திட்டம் 2015-ல் தொடங்கப்பட்டது. ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன், 10 வயது வரை, பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் அவரின் பெயரில் கணக்கை திறக்கலாம். இது மிகவும் நம்பகமான, உயர்வட்ட வட்டி விகிதத்துடன் கூடிய சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும்.
வட்டி விகிதம் மற்றும் நன்மைகள்:
ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது.
மாதத்திற்கு குறைந்தது ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
21 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய தொகையை உருவாக்கலாம்.
முதலீட்டில் வரி-இல்லா (Tax-Free) வருமானம் கிடைக்கும்.
மாதம் ரூ.1,000 சேமிப்பின் மூலம், 21 ஆண்டுகளில் சுமார் ₹5.5 லட்சம் நிதி சேமிக்கலாம்.
டெபாசிட் காலம்:
கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகள் வரை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.
21 வயது ஆகும்போது கணக்கு முழு முதிர்வு காலம் அடைகிறது.
முதலீடு நிறுத்திய பிறகும் வட்டி தொடர்ந்தும் வளரும்.
கணக்கு திறக்கும் முறை:
அருகிலுள்ள தபால் நிலையம் அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட வங்கி மூலம் கணக்கை திறக்கலாம்.
அவசியமான ஆவணங்கள்: மகளின் பிறப்புச் சான்று, பெற்றோரின் அடையாளச் சான்று (ஆதார், வாக்காளர் அட்டை, பான் கார்டு).
இந்த சுகன்யா சம்ரித்தி யோஜனா உங்கள் மகளின் கல்வி, திருமணம் மற்றும் முக்கிய செலவுகளுக்கு நிதி ரீதியாக பாதுகாப்பு வழங்கும் சிறந்த வழியாகும்.

