சினிமா செய்திகள்
சக்சஸ் தருவானா சங்கத்தமிழன்? டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
வாலு, ஸ்கெட்ச் என்ற அசா பிளேட் படங்களை இயக்கிய விஜய் சந்தருக்கு எப்படி தான் விஜய்சேதுபதி ஓகே சொன்னார் என்ற கன்ஃப்யூசனில் கோலிவுட் குழம்பித் தவித்தாலும், இந்தமுறை நிச்சயம் வெற்றி ஃபார்முலாவை பயன்படுத்தி ஹிட் கொடுக்க வேண்டும் என டைட்டிலில் இருந்தே விஜய் சந்தர் தனது வேலையை ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.
இமைக்கா நொடிகள் படத்தில் மச்சான் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்த ராஷி கண்ணா இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாகியுள்ளார்.
இப்போதைக்கு ராஷி கண்ணா காட்டில் தான் செம்ம மழை என கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்து வருவதால், தொடர்ந்து பல புதிய படங்களில் புக் ஆகி வருகிறார் ராஷி கண்ணா.
விஜய்சேதுபதிக்கும் தொடர்ந்து தோல்விகள் வருவதால், நிச்சயம் சங்கத்தமிழன் சக்சஸ் தமிழனாக மாறுவான் என நம்பி கடின உழைப்பை கொட்டி வருகிறார் விஜய்சேதுபதி.

















