Connect with us

தமிழ்நாடு

பெரும்பான்மையான திமுகவினர் தமிழர்களே அல்ல.. சுப்பிரமணியன் சுவாமி

Published

on

பெரும்பான்மையான திமுகவினர் தமிழர்களே அல்ல என பாஜக பிரபலம் சுப்பிரமணியன் சாமி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக கவர்னர் ரவி, ‘தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வது சரியாக இருக்கும் என்று கூறினார். இதற்காக கவர்னர் மீது கடும் விமர்சனத்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் என்று பெயர் மாற்ற வேண்டும் என்றோ, தமிழ்நாடு என்ற சொல் தவறானது என்றோ, அவர் சொல்லவில்லை என்றும் அவர் தமிழகம் என்பதை ஒரு பரிந்துரையாக,ம் ஒரு ஆலோசனையாக தான் கூறினார் என்றும் ஆனால் அதிமுகவினர் கடும் விமர்சனம் வைத்தது தவறு என்று பாஜகவினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில் கவர்னர் ரவி உரையாற்றி கொண்டிருந்தபோது அவருக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் கோஷமிட்டனர். தமிழக சட்டசபை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் கவர்னருக்கு எதிராக கோஷமிட்டது தவறு என்றும் நடுநிலை அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று கவர்னர் ரவி உரையை வாசித்துக் கொண்டிருந்த போது சில வார்த்தைகளை அவர் கூறவில்லை என குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதனை அடுத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் கவர்னர் முன்னிலையிலேயே அவருக்கு எதிரான ஒரு தீர்மானத்த கொண்டு வந்தார். இதனையடுத்து உடனடியாக கவர்னர் வெளிநடப்பு செய்தார் என்பதும் இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மூத்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியபோது ’தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்பது ஒரு சிறந்த வார்த்தையாக இருக்க முடியும் என்று ஆளுநர் கூறினாரே தவிர அவர் ஒரு அறிக்கையாக வெளியிட வில்லை என்றும், சட்டத்தில் திருத்தம் செய்ய வில்லை என்றும் இது ஒரு பரிந்துரை மட்டுமே என்றும் ஆனால் திமுகவினர் இந்த ஆலோசனையை பொறுத்துக் கொள்ளாமல் விமர்சனம் செய்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

பெரும்பாலான திமுகவினர் தமிழர்களே இல்லை என்றும் அவர்கள் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் என்றும் அவர்களின் தாய்மொழி தெலுங்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு என்ற பெயர் சட்டசபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அன்றைய குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட போது கூட அப்போதைய முதல்வர் சிஎன் அண்ணாதுரை தமிழ் நாடு என்றால் தமிழ்நாடு மாநிலம் என்றுதான் பொருள் என்றும் தனி நாடு என்று பொருள் படாது என்றும் தெளிவாக கூறியிருந்தார். தற்போது பிரிவினைவாதத்தை திமுகவினர் ஏற்படுத்துகின்றனர் என்றும் சுப்பிரமணியன் சாமி குற்றஞ்சாட்டினார்.

தமிழக ஆளுநர் மீது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதுகுறித்து சரி செய்வதற்காக குடியரசுத் தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் அல்லது பிரதமரிடம் பேசலாம் என்றும் அதை விடுத்து அவரை நேரடியாக விமர்சனம் செய்வது மற்றும் அவருக்கு எதிராக தீர்மானம் சட்டசபையில் இயற்றுவது என்பது சரியான வழி அல்ல என்றும் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா7 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்8 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா8 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா2 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா2 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
Buy spravato esketamine 56mg nasal spray dose kit for rapid relief from treatment resistant depression (trd)..