தமிழ்நாடு
தமிழக பட்ஜெட் எப்போது? சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதியை சபாநாயகர் அப்பாவு அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அவர்கள் மார்ச் 18ஆம் தேதி தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று கூறினார்.
2022 -2023 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் தாக்கல் செய்வார் என்றும் அதே போல் விவசாய பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் தாக்கல் செய்வார் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட்டாக இருக்கும் என்றும் இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதுமே நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.