Connect with us

தமிழ்நாடு

பாஜகவுக்கு எதிராக கூச்சலிட்ட பெண்ணை தீவிரவாதியாக சித்தரிக்கும் தமிழிசை!

Published

on

தமிழக பாஜக தலைவர் தமிழிசை பயணம் செய்த விமானத்தில் பாசிச பாஜக ஒழிக என ஒரு பெண் கூச்சலிட்டதால் அவர் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் என தமிழிசை செய்தியாளர்களிடம் பேசியுள்ளது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று மாலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார் தமிழிசை. அவர் பயணம் செய்த விமானத்தில் சோஃபியா என்ற பெண்ணும் பயணித்துள்ளார். வெளிநாட்டில் ஆராய்ச்சி படிப்பை முடித்து நாடு திரும்பும் சோஃபியா தமிழிசையை பார்த்ததும் பாசிச பாஜக ஒழிக, ஒழிக என கோஷமிட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தமிழிசை விமானம் தரையிறங்கியதும் அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பதிலுக்கு அந்த பெண்ணும் கோஷமிட எனக்கு உரிமை உள்ளது என வாக்குவாதம் செய்துள்ளார். இதனையடுத்து விமான நிறுவனத்திடமும், விமானநிலைய காவல்நிலையத்திலும் புகார் அளித்தார் தமிழிசை.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, கூச்சலிட்ட பெண் எதாவது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்பது எனது சந்தேகம். அவர் சாமானிய பயணியைப் போல் நடந்துகொள்ளவில்லை. வெளியே வந்து என்ன வேண்டுமானாலும் கூச்சலிடலாம் என்றார்.

பாஜகவுக்கு எதிராக கூச்சலிட்ட பெண்ணை தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் என தமிழிசை கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூச்சலிட்டால் அவர் தீவிரவாதியா? பொதுவாக பாஜகவுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் பேசினால் அவர்கள் தேச விரோதிகள், தீவிரவாதிகள் என பாஜக முத்திரை குத்துவது வழக்கமாக நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சி தான் தமிழிசை இப்படி கூச்சலிட்ட பெண் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் என கூறியுள்ளது. இவர்களது இந்த கருத்து ஜனநாயகத்துக்கு எதிரானது. அனைத்து கட்சியினரும் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?