Connect with us

பல்சுவை

தினமும் இந்த கீரைகளை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

Published

on

முருங்கை கீரை:

முருங்கை கீரை உடலுக்கு சக்தி, வலிமையை வழங்குகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தும், மாதவிடாய் வலியை குறைக்கும். ஆண்மையை அதிகரிக்கும். தாதுவை விருத்தி செய்யும். பால் கொடுக்கும் தாய்மார்கள் மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் நன்றாக பால் சுரக்கும். முருங்கை கீரை கசப்பு தன்மை கொண்டது. முருங்கைக் கீரை சத்தான உணவு. முருங்கை கீரையில் வைட்டமின் ஏ,பி,சி புரதம், இரும்புச் சத்து போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. முருங்கை கீரை இலையை எடுத்த பின் மிஞ்சிய காம்புகளை மட்டும் நறுக்கி மிளகு சேர்த்து ரசம் வைத்து உட்கொள்ள கை, கால் அசதி நீங்கும். முருங்கைக் கீரையை வெள்ளரி விதையுடன் அரைத்து வயிற்றின் மேல் கனமாக பூச நீர்கட்டி உடைத்து சிறுநீரை பெருக்கும். முருங்கை பூவை சம அளவு துவரம் பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் உண்ண கண் எரிச்சல், வாய் நீர் ஊறல் மற்றும் வாய் கசப்பு போகும்.

புளிச்சக்கீரை:

இந்த கீரையை வாரத்தில் இரண்டு முறையாவது சாப்பிட வேண்டும். மலச்சிக்கல், வாதநோய் மற்றும் சொறி சிரங்கு, புண்குணமாகும். பித்த தேகம் உள்ளவர்கள் இதைச் சாப்பிடக்கூடாது.

அரைக்கீரை:

அரைக்கீரை உடல் விஷங்களை முறிக்கும், தோல் நோய்களை போக்கும். குடல் புண்னை குணப்படுத்தும். கண்சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாக்கும், நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். அரைக்கீரையுடன் வெங்காயம் சேர்த்து நெய்யில் பொரித்து சாப்பிட்டு வந்தால் புதுரத்தம் ஊறி தாது அணுக்கள் உற்பத்தியாகும்.

மூக்கிரட்டை கீரை:

மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் தண்டினை சாப்பிட்டு வருவதால் சிறுநீரகங்களின் உருவாகும் கற்கள் மற்றும் சிறுநீரக தொற்றுநோய்கள் வருவதை தடுத்து நிறுத்தும்.

வெந்தயக்கீரை:

வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கிவதக்கி 2 டம்ளர் தண்ணீர் விட்டு, 1 டம்ளர் அளவுக்கு காய்ச்சி காலை, மாலை அரை டம்ளர் வீதம் குடித்து வற்தால் நெஞ்சுவரி குணமாகும். கபம், சளி உள்ளவர்கள் வெந்தயக்கீரை சாப்பிட்டால் சரியாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும். கீரையில் உள்ள புரதப்பொருட்களான சாப்போனின், மியூக்கலேஜ் போன்றவை பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ஜீரணச்சக்தியை உண்டாக்கும். உடல் பலம் தரும். அறிவைத் தெளிபடுத்தும், சுறுசுறுப்பு உண்டாகும்.

சுக்காங்கீரை:

சுக்காங்கீரை உடலிலுள்ள அதிக வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியைத் தருகிறது. மேலும் ரத்தத்தைச் சுத்தப்படுத்துவதோடு, புதிய இரத்தம் உற்பத்தியாகவும் துணைபுரிகிறது. பித்த சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும் நிவாரணமளிக்கிறது. குடல் நோய்களை சரி செய்து குடலுக்கு வலுவையும் சீராக இயங்கும் சக்தியையும் அளிக்கிறது.

மிளகுக்கீரை:

வெதுவெதுப்பான நீரில் ஒரு சில துளிகள் மிளகுக்கீரை எண்ணெய் சேர்த்து உணவுக்கு பிறகு குடிப்பது இரைப்பை குடல் வரி நீக்கி, வாயு தொல்லையை குணப்படுத்தும். வயிறு, குடல் வீக்கம் குறைக்க உதவும். சோம்பு எண்ணெய் வாயுப் பிரச்சனை, அஜீரணத்திற்கு உதவுவதுடன், இரத்த ஓட்டத்தை சரி செய்கிறது. இதனால் வாயு எரிச்சலும் குணமாகும்.

சிறுகீரை:

சிறுகீரை மலர்ச்சிக்கலை குறைக்கும் உடல் சித்தத்தை குறைக்கும்.

பொன்னாங்கண்ணி கீரை:

கண் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும். உடல் உஷ்ணம் குறையும், இரத்தம் விருத்தியாகும்.

முளைக் கீரை:

நரம்புத்தளர்ச்சி, மாலைக்கண் நோய், வயிற்றுப்புண், நீரடைப்பு, மூக்கு, தொண்டை, வாய், பல் சம்பந்தமான வியாதிகளைக் குணமாக்கும்.

சாணாக்கீரை:

மகோரதம் என்னும் வியாதியை பூரணமாக குணப்படுத்தும். இது குழிப்புண், ஆறாப்புண்களைக் கூட குணப்படுத்தும் சக்தியுள்ளது.

சிறுகசலைக் கீரை:

மலத்தை இளக்கி வெளியேற்றும். உடல் சூடு தணியும், சிறுநீர் சம்பந்தமான வியாதிகளைக் குணமாக்கும்.

ஆரைக் கீரை:

பித்த வியாதிகளைக் குணமாக்கும். அதிக அளவில் சிறுநீர் இறங்குவதைக் கட்டுப்படுத்தும். இரத்தப்பிரமேகம் என்னும் வியாதியைக் குணமாக்கும்.

தண்டுக்கீரை:

மூல நோய் உள்ளவர்கள் இந்த கீரையை அடிக்கடி சமைத்து உண்ண அந்த நோய் குணமாகும். இந்த கீரையை அடிக்கடி உட்கொண்டால் நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும். உடல்புண் உள்ளவர்களுக்கும் பெண்களுக்கு வலியுடன் கூடிய மாதவிடாய் ,அதிக உதிரப்போக்கு போன்றவற்றிக்கு சிவப்பு நிற தண்டுக்கீரை மிகவும் சிறந்தது.மேலும் கருப்பை கோளாறுகளையும் போக்க வல்லது.

வல்லாரை:

காசநோய், ஈளை முதலியன அகலும். நினைவாற்றலைப் பெருகச் செய்யும்.

கரிசலாங்கண்ணிக் கீரை:

கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளுக்கு நன்மை புரிகிறது.

பாலக்கீரை:

பாலக்கீரையில் வைட்டமின் ஏ,பி ,சி உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு பாலக்கீரை சிறந்தாகும். அதோடு பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த கீரையை சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்கும். பாலக்கீரையை சாப்பிடுவதால் புற்றுநோய் வராது. இதில் புரத சத்து அதிகமாக இருப்பதால் மாரடைப்பு, ரத்த குழாய் அடைப்பு மற்றும் இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுத்து நிறுத்தும்.

பசலைக்கீரை:

பசலைக்கீலையில் உள்ள கரோட்டினாய்டு என்னும் லுடின், கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மை கொண்டது. இதில் மக்னீசியம் அதிகம் உள்ளதால், ரத்த அழுத்தத்தை சீதைக வைத்துக்கொள்ள உதவுகிறது. தினமும் உணவில் சேர்த்து வந்தால், இதயம் புற்றுநோயை எதிர்த்து போராடுவதில் சிறந்தது. மேலும், மூட்டு வலி, வீக்கம், நோயெதிர்ப்பு அழற்சியை குணமாக்கும்.

அகத்திக்கீரை:

மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளையும் குணமாக்கும்.அகத்தி கீரையை தொடர்ந்து வாரம் இருமுறை உணவில் சேர்த்து கொண்டால் ரத்தக் கொதிப்பு, மூலம் பித்த கோளாறுகள் தீரும். பல மருந்துகளை சாப்பிடுவதால் ஏற்படும் உடல் வெப்பத்தை தணிக்க அகத்தி கீரையுடன் பாசி பருப்பு சேர்த்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். அகத்தி கீரை சாப்பிடும் போது இறைச்சி சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் சிலருக்கு அலர்சி உண்டாகலாம். அதுமட்டுமல்லாமல் மருந்துகளின் வீரியத்தை இது குறைக்கும்.

சினிமா2 days ago

என்னடா இது சந்திரமுகிக்கு வந்த சோதனை? கங்கனா, லாரன்ஸ் லுக்கை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சினிமா2 days ago

IPL 2023: கடைசியில மழை தான் ஜெயிச்சுது.. அகமதாபாத் போயி அசிங்கப்பட்ட சதீஷ்!

சினிமா2 days ago

திருப்பதியில் இருக்கேனே.. தமிழில் பேச முடியாதுன்னு சொன்ன கீர்த்தி சுரேஷ்.. கொதிக்கும் ரசிகர்கள்!

சினிமா3 days ago

கையில காசு வாயில தோசை.. லைகாவுக்கே விபூதி அடித்த த்ரிஷா!

சினிமா4 days ago

ஐபிஎல் இறுதிப்போட்டி நிறைவு விழாவில் கலக்கப் போகும் ஜோனிடா காந்தி!

சினிமா4 days ago

திருமணமான காதலரை மீண்டும் அடைய நினைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. தீராக் காதல் விமர்சனம்!

கிரிக்கெட்4 days ago

குஜராத் அதிரடி ஆட்டம்: மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது!

சினிமா4 days ago

ஷாக்கிங்.. யூடியூபர் இர்ஃபான் கார் விபத்து.. மூதாட்டி பரிதாப சாவு.. திருமணம் ஆன கொஞ்ச நாளில் இப்படியா?

சினிமா4 days ago

கழுவேத்தி மூர்க்கன் விமர்சனம்: அருள்நிதிக்கு அட்டகாசமான கம்பேக்.. தாராளமா தியேட்டரில் போய் பார்க்கலாம்!

சினிமா செய்திகள்5 days ago

சிவகார்த்திகேயனுக்கு செக் வைத்த சியான் விக்ரம்.. துருவ நட்சத்திரம் ரிலீஸ் அந்த தேதியிலா?

சினிமா5 days ago

வெறும் ஜட்டியோட நில்லு.. அப்ப தான் சான்ஸ்.. பிரியங்கா சோப்ராவுக்கே இந்த நிலைமையா?

கிரிக்கெட்7 days ago

10வது முறையாக இறுதிப் போட்டியில் சென்னை: 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி அசத்தல் வெற்றி!

சினிமா செய்திகள்5 days ago

சிவகார்த்திகேயனுக்கு செக் வைத்த சியான் விக்ரம்.. துருவ நட்சத்திரம் ரிலீஸ் அந்த தேதியிலா?

சினிமா6 days ago

3 படத்தை போல லால் சலாம் படத்தின் கதையும் திருட்டுக் கதையா? ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு ஏற்பட்ட சிக்கல்!

சினிமா6 days ago

டாய்லெட் விளம்பரத்தில் நடித்த அப்பாஸ்.. இப்போ என்ன இப்படியொரு வேலை செய்யுறாரு?

சினிமா5 days ago

60ம் கல்யாணம் பண்ற வயசுல.. 2வது திருமணம்.. ரசிகர்களை அதிர வைத்த ஆஷிஷ் வித்யார்த்தி!

சினிமா4 days ago

கழுவேத்தி மூர்க்கன் விமர்சனம்: அருள்நிதிக்கு அட்டகாசமான கம்பேக்.. தாராளமா தியேட்டரில் போய் பார்க்கலாம்!

சினிமா5 days ago

ஒரு பக்கம் அன்னதானம்.. இன்னொரு பக்கம் அறிவு தானம்.. விஜய் அன்ன அறிவு அரசியல்!

சினிமா4 days ago

ஷாக்கிங்.. யூடியூபர் இர்ஃபான் கார் விபத்து.. மூதாட்டி பரிதாப சாவு.. திருமணம் ஆன கொஞ்ச நாளில் இப்படியா?

கிரிக்கெட்4 days ago

குஜராத் அதிரடி ஆட்டம்: மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது!

%d bloggers like this: