Connect with us

சினிமா செய்திகள்

அஜித், விஜய் படங்களுக்கு பாடிய பாடகர் மாரடைப்பால் மரணம்!

Published

on

By

அஜித், விஜய், தனுஷ் உள்பட பல பிரபல நடிகர்களின் படங்களில் பாடிய பாடகர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி பாடகர்களில் ஒருவர் கேகே. கிருஷ்ணகுமார் என்று அழைக்கப்படும் இவர் பாலிவுட்டில் பல திரைப்படங்களில் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என இந்தியாவில் உள்ள 11 மொழிகளில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் வெளியான ’காதல் தேசம்’ என்ற படத்தில் கல்லூரி சாலை என்ற பாடலை பாடியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன் பின்னர் அஜித், விஜய், தனுஷ் உள்பட பல நடிகர்களின் படங்களில் பாடியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பாடகர் கேகே கலந்து கொண்ட நிலையில் இசை நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவருடைய உதவியாளர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்த போது மாரடைப்பு காரணமாக ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பாடகர் கே கே மறைவிற்கு பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு14 hours ago

சென்னை கடற்கரையில் தண்ணீரில் குளிப்பவர்களைக் கண்காணித்துக் காப்பாற்ற ட்ரோன்கள் அறிமுகம்!

வணிகம்18 hours ago

சென்னையில் 5ஜி சேவையைத் தொடங்கியது ஏர்டெல்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?

சினிமா செய்திகள்2 days ago

தமிழ்நாட்டில் குறைந்த நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படங்களின் பட்டியல்..!

இந்தியா5 days ago

இனி போன் எடுக்கும் போது ‘ஹேலோ’ சொல்லக் கூடாது.. அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!

வேலைவாய்ப்பு1 week ago

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

தூத்துக்குடி மாவட்டக்‌ குழந்தைப்‌ பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

அரசு தலைமை மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!