சினிமா செய்திகள்
காவி நிறத்தில் ஒரு கண்றாவி உடை.. தீபிகா படுகோனுக்கு உள்துறை அமைச்சர் எச்சரிக்கை!

ஷாருக்கான் நடித்த ‘பதான்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக தீபிகா படுகோன் நடித்து இருக்கும் நிலையில் இந்த படத்தின் பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலில் தீபிகா படுகோனே கவர்ச்சியாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக காவி உடையில் அவர் கண்றாவியான காஸ்ட்யூமில் நடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் பிரபல நடிகை தீபிகா படுகோன் நடித்த ‘பதான்’ திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று வெளியானது.
திருமணமாகி சில வருடங்கள் ஆன தீபிகா படுகோன் இந்த அளவுக்கு மோசமாக கிளாமர் காட்சிகளில் நடித்திருப்பார் என்று ரசிகர்களை எதிர்பார்க்கவில்லை. மிகவும் ஆபாசமான பிகினி உடையில் அவர் இந்த பாடலில் தோன்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக காவி மற்றும் பச்சை நிறத்தில் அவர் அணிந்து இருந்த பிகினி ஆடை ஆபாசத்தின் உச்சமாக இருந்ததாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா என்பவரும் தீபிகா படுகோனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தீபிகா படுகோனின் உடை மாற்றும் காட்சிகள் மிகவும் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையில் இருப்பதாகவும் உடனடியாக அதை சரி செய்யாவிட்டால் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கப்படுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து ’பதான்’ படக்குழுவினர் இந்த பாடலை படத்தில் இருந்து நீக்கலாமா? அல்லது வேறு காஸ்ட்யூமில் மீண்டும் படமாக்குவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.