சினிமா செய்திகள்
கார்த்தியை அடுத்து விஜய்சேதுபதி படத்தில் இணைந்த சிம்பு!

கார்த்தி நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’சுல்தான்’ என்ற திரைப்படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடினார் என்பதும் அந்த பாடல் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது என்பது குறித்து அறிந்ததே.
இந்நிலையில் கார்த்தியை அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் படத்திலும் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் வெங்கடகிருஷ்ணன் ரோக்நாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான அறிவிப்பில் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ’முருகா’ என்ற பாடலை சிம்பு பாடி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதுமட்டுமின்றி இந்த பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிம்பு தன்னுடைய படத்தில் மட்டுமின்றி மற்ற மாஸ் ஹீரோக்களின் படங்கள் படங்களிலும் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது விஜய் சேதுபதிக்கும் ஒரு பாடலை பாடி உள்ளது அவரது பெருந்தன்மையை காட்டுவதாக கோலிவுட் திரையுலகில் தெரிவித்து வருகின்றனர்.
#YaadhumOoreYaavarumKelir first single track #Muruga sung by @SilambarasanTR_
Releasing tom@6PM@nivaskprasanna musical@VijaySethuOffl @ChandaraaArts @cineinnovations @akash_megha @raguaditya_ @mcsaiofficial @Lyricist_Mohan @Riythvika @saregamasouth @onlynikil @CtcMediaboy pic.twitter.com/zhA5yVacvU
— Diamond Babu (@idiamondbabu) March 18, 2021

















