சினிமா செய்திகள்
சிம்பு-யுவனின் ‘தப்பு பண்ணிட்டேன்’ பாடல்: வேற லெவலில் வைரல்
Published
2 years agoon
By
Shiva
பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் யூ1 நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இசையமைப்பாளர் ஏகே பிரியம் இசையமைப்பில் சிம்பு பாடிய ‘தப்பு பண்ணிட்டேன்’ என்ற பாடலின் டீசர் நேற்று வெளியானது என்பதும் இந்த டீசர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
’தப்பு பண்ணிட்டேன்’ என்று தொடங்கும் இந்த பாடலை விக்னேஷ் ராமகிருஷ்ணா என்பவர் எழுதியிருக்க, சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்த நிலையில் பிரபல நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் மேகா ஆகாஷ் இந்த பாடலுக்கு நடித்து இருந்தனர்.
இந்த பாடலையும் ஜம்போ என்பவர் இயக்கியிருந்தார் என்பதும், தப்பு பண்ணிட்டேன் என்ற முழு பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக ஏற்கனவே யுவன்சங்கர்ராஜா அறிவித்திருந்த நிலையில் சற்று முன் அவருடைய சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்த பாடலை சிம்பு வேற லெவல் பாடியிருக்க அதற்கு காளிதாஸ் ஜெயராம் மற்றும் மேகா ஆகாஷ் சூப்பராக நடித்துள்ளனர். இதனை அடுத்து இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் தோல்வியை இதைவிட வேறு யாராலும் இசையாலும் குரலாலும் நடிப்பாலும் வெளிப்படுத்த முடியாது என கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்த்தக்கது.
You may like
-
என் மகன் சிம்புவுக்கு பெண் பார்க்க அவர் ஒருவரால் தான் முடியும்: டி ராஜேந்தர் பேட்டி
-
சிம்பு குரலில் விஜய்யின் வாரிசு பட பாடல்.. தீ.. இது தளபதி.. இணையத்தைத் தெறிக்கும் பாடல்!
-
பத்து தல முடிந்தது.. சிம்புவின் அடுத்த படம் இந்த இயக்குனருடன் தானா?
-
ஒரே நாளில் வெளியான இரண்டு சிம்பு படங்களின் ரிலீஸ் தேதி! ரசிகர்கள் குஷி
-
சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் டி ராஜேந்தர்: சிம்பு அறிக்கை
-
நாளை சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டம்: சூப்பர் அறிவிப்பு!