சினிமா செய்திகள்
விஸ்வரூபம் எடுக்கும் ‘தமிழ்’ பிரச்சனை: அனிருத், சிம்பு டுவிட்!

தமிழை இணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டும் என ஏஆர் ரஹ்மான்கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதற்கு ஆதரவாக சிம்பு மற்றும் அனிருத்ஆகியோர்களும் தங்களது டுவிட்டரில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் இணைப்பு மொழியாக அனைவரும் ஹிந்தியை பயன்படுத்த வேண்டும் என்றும் ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.
அவருடைய இந்த கருத்துக்கு தமிழகத்திலிருந்து பெரும் எதிர்ப்பு இருந்தது என்பதும் பாஜக ஆதரவாளர்களான அதிமுகவினர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த போது தமிழ்தான் இணைப்பு மொழி என்று கூறினார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது .
இந்த நிலையில் சற்று முன்னர் அனிருத் மற்றும் சிம்பு ஆகியோர் தங்கள் டுவிட்டரில், ‘தமிழால் இணைவோம்’ என்று டுவிட் செய்து ஏஆர் ரஹ்மானுக்கு தங்களது ஆதரவை அளித்துள்ளனர். இதனால் இந்த விவகாரம் இன்னும் விஸ்வரூபம் எடுக்கும் என தெரிகிறது.















