சினிமா செய்திகள்
‘நேரம் ஒருத்தனுக்காக மட்டும் நின்றால்…!’- சிம்புவின் அரசியல் ‘மாநாடு’ டீசர்!
Published
2 years agoon
By
Barath
நடிகர் சிம்பு நடிப்பில் உருவான மாநாடு படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் மாநாடு படம் திரை அரங்கங்களில் வெளியாக உள்ளது. சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய வேடங்களில் மனோஜ் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் நடித்துள்ளனர்.
சிம்புவின் மாநாடு பட டீசரை ஒரே நேரத்தில் தமிழ், மலையாள, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிட்டுள்ளனர். தமிழ் டீசரை ஏ.ஆர்.ரஹ்மான், மலையாளத்தில் நடிகர் ப்ரித்திவிராஜ், தெலுங்கு மொழியில் நடிகர் ரவி தேஜா, கன்னடத்தில் கிச்சா சுதீப், ஹிந்தியில் அனுராக் கஷ்யப் ஆகியோர் ஒரே நேரத்தில் வெளியிட்டுள்ளனர்.
சிம்புவின் 38-வது பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்காக மாநாடு டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சிம்பு அப்துல் காலிக் ஆக நடித்துள்ளார். நேரம் சார்ந்த ஆக்ஷன் படமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Here is the teaser of Maanaadu. https://t.co/dFeyq21W6K#Maanaaduteaser #HBDSilambarasan #Rewind #Maanaadu #aVPpolitics @silambarasanTR_ @vp_offl @sureshkamatchi @thisisysr
— A.R.Rahman (@arrahman) February 3, 2021
You may like
-
என் மகன் சிம்புவுக்கு பெண் பார்க்க அவர் ஒருவரால் தான் முடியும்: டி ராஜேந்தர் பேட்டி
-
சிம்பு குரலில் விஜய்யின் வாரிசு பட பாடல்.. தீ.. இது தளபதி.. இணையத்தைத் தெறிக்கும் பாடல்!
-
பத்து தல முடிந்தது.. சிம்புவின் அடுத்த படம் இந்த இயக்குனருடன் தானா?
-
ஒரே நாளில் வெளியான இரண்டு சிம்பு படங்களின் ரிலீஸ் தேதி! ரசிகர்கள் குஷி
-
சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் டி ராஜேந்தர்: சிம்பு அறிக்கை
-
நாளை சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டம்: சூப்பர் அறிவிப்பு!