தமிழ்நாடு
வடையில் இருந்த பிளாஸ்டிக் துண்டு: பிரபல ஓட்டல் மீது வழக்கு தொடுத்த சீரியல் நடிகை!

பிரபல சீரியல் நடிகை ஒருவர் சென்னையில் உள்ள பிரபலமான ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் போது அவர் சாப்பிட்ட வடையில் சிறிய பிளாஸ்டிக் துண்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த ஓட்டல் மீது வழக்கு தொடர்ண்ட்ஜி இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று, ‘கண்மணி’ என்பதும் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் சாம்பவி குருமூர்த்தி என்பதும் அனைவரும் அறிந்ததே. சாம்பவி குருமூர்த்தி சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் ரசிகர்களால் வரவேற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது பிரபல ஹோட்டல் ஒன்றில் ஆர்டர் செய்த உணவை சாப்பிட்டதாகவும் அதிலிருந்த வடையை சாப்பிட்ட போது அதில் ஒரு சிறிய ரக பிளாஸ்டிக் துண்டு இருந்ததாகவும் அதை தெரியாமல் சாப்பிட்ட போது அது தொண்டையில் சிக்கியது என்றும், பின்னர் மிகுந்த சிரமப்பட்டு தான் அந்த பிளாஸ்டிக் கொண்ட வெளியே எடுத்தேன் என்றும் நீங்களும் எந்த ஓட்டலில் ஆர்டர் செய்து சாப்பிட்டாலும் கவனத்துடன் சாப்பிடுங்கள் என்றும் அந்த ஓட்டல் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் சாம்பவி குருமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
சென்னை உள்பட பல நகரங்களில் கிளைகளைக் கொண்ட அந்த ஓட்டல் நிர்வாகம் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
https://www.instagram.com/p/CYlYVrnrziV/



















