உலகம்
ஆன்லைனில் பாலியல் ரீதியாக ராகிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்!

சர்வதேச புகழ் பெற்ற யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களிடம், சீனியர் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பலியல் ரீதியாக ராகிங் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகக் கல்லூரிக்கு வரும் முதலம் ஆண்டு மாணவர்களிடம், சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வது நடைபெறும். இதற்கு எதிரக கடுமையான சட்டங்களும் அமலில் உள்ளன.
இப்போது கொரோனா காலம் என்பதால், கல்லூரிகளில் பாடங்கள் ஆன்லைனில் நடைபெற்று வருகின்றன. அதை பின்பற்றும் மாணவர்கள் ராகிங்கையும் ஆன்லைனில் நடத்திய சம்பவம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களை ஆடைகளைக் கலைய வைத்து, ஆபாசப் படங்கள் போன்று எல்லாம் ராகிங் செய்துள்ளனர். இதை அறிந்த பல்கலைக்கழக நிர்வாகம் ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் பிற மாணவர்களுக்கும், ராகிங் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.












