டிவி
பிக்பாஸ் வீட்டில் இரண்டாவது குண்டை தூக்கிப்போட்ட பிக்பாஸ்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக கடந்து வந்த பாதை என்ற கதை சொல்லும் பொட்டி நடைபெற்று வந்தது.
ஏற்கனவே அதில் முதலாவது பங்கேற்றவர்களில் ரேகா, கேப்ரில்லா, சனம் ஷெட்டி, சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டவர்களின் கதை சரியாக இல்லை என்று கூற, அவர்களை நேரடியாக அடுத்தவராம் நடைபெற உள்ள எவிக்ஷனுக்கு அனுப்பினார் பிக்பாஸ்.
அதே போன்று இன்று இரண்டாம் குழுவினர் சொன்ன கடந்து வந்த பாதை கதையை வைத்து, யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டில் இருக்கத் தகுதியற்றவர்கள் என்பதைத் தேர்வு செய்யக் கூறுகிறார் பிக்பாஸ்.
அதை முன்னதாக வந்து அறிவிக்கும் சம்யுக்தா ஹெக்டே, “ஆஜித், ரம்யா பாண்டியன், ஷிவானி, சுரேஷ் சக்கரவர்த்தி என்று அறிவித்தார். அதற்கான காரணம் இவர்களை ஒப்பிடும் போது பிறர் கடந்து வந்த பாத போராட்டம் மிகுந்ததாக இருந்தது என்றும் கூறுகிறார்.”
அதை அடுத்து ஏமாற்றத்துடன் பிக்பாஸ் வீட்டின் வெளியில் வரும் சுரேஷ் சக்கரவர்த்தி “எனது 100% ரைட்” என்று கூறிக்கொண்டு நடக்கிறார். இதுவரை 8 பேர் எவிக்ஷனுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் அடுத்த வாரம் முழுவதும் தங்களை நிரூபிக்கக் கடுமையாகப் போராட வேண்டி இருக்கும்.