ஆன்மீகம்
சனி பெயர்ச்சி: மேஷம், சிம்மம், தனுசு ராசிகளுக்கு பொற்காலம்!

சனி பகவான், நீதியின் கடவுளாகக் கருதப்படுகிறார். விரைவில் சனி சதயம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையவிருக்கிறார். இதன் காரணமாக, மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிக்காரர்களுக்கு மகத்தான பலன்கள் கிடைக்கப்போகின்றன.
மேஷம்:
அக்டோபர் 3 ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு சனி சதயம் நட்சத்திரத்தில் நுழையவுள்ளார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகும். தொழிலிலும், வேலையிலும் முன்னேற்றம் காணலாம். பொருளாதாரத்தில் சந்தோஷமான மாற்றங்கள் ஏற்படும். கடன் தொல்லை குறையும். ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்:
சனி பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையில் உற்சாகத்தை ஏற்படுத்தும். கல்வித்துறையில் வெற்றி கிடைக்கும். தைரியமும் வீரமும் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் காணலாம்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி வேலை, தொழில் ஆகியவற்றில் முன்னேற்றம் தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் நிறைவு பெறும். புதிய வேலை தேடுபவர்கள் வெற்றி பெறுவார்கள். வாழ்க்கையில் ஆரோக்கியம் மற்றும் மனநலத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா மற்றும் கோளறு பதிகத்தை கூறுவது நன்மை தரும். ஏழை, எளியவர்களுக்கு உதவுவதன் மூலம் சனிபகவானின் அருளைப் பெறலாம்.























