சினிமா செய்திகள்
சொன்னதைச் செய்த தமிழ் ராக்கர்ஸ்.. சர்கார் படக்குழு அதிர்ச்சி!

தமிழ் திரைப்படங்களைப் பைரசியாக வெளியிடும் புகழ் பெற்ற இணையதளமான தமிழ் ராக்கர்ஸ் சர்கார் திரைப்படத்தின் எச்டி பதிப்பினை டிலீஸ் தேதியான நவம்பர் 6-ம் தேதியே வெளியிடுவோம் என்று தெரிவித்ததைப் போலவே செய்தும் காட்டியுள்ளது.
விஜய் ரசிகர்கள் அதிகாலை முதல் சர்கார் திரைப்படத்தினைப் பார்த்து தீபாவளியை கொண்டாடி வரும் நிலையில் தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் படம் வெளியாகி இருப்பது அவர்களுக்கு அதிர்ச்சி அளித்து வருகிறது.
அதே நேரம் படம் குறித்து நல்ல படியான விமர்சனங்கள் வந்துகொண்டு இருப்பது மிகப் பெரிய பலமாகவும் பார்க்கப்படுகிறது.
தமிழ் ராக்கர் எதிராகப் பல்வேறு வகையில் நடவடிக்கை எடுத்து வரும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு இந்த முறையும் தோல்வியே கிடைத்துள்ளது.








