ஆன்மீகம்
2026 சனிப்பெயர்ச்சி தேதி அறிவிப்பு: திருநள்ளாறு கோவிலில் மார்ச் 6 ஆம் தேதி சிறப்பு விழா!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் சனீஸ்வர ஆலய நிர்வாகம், 2026 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் அதிகாரப்பூர்வ தேதியை அறிவித்துள்ளது.
வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில், 2026 மார்ச் 6 ஆம் தேதி காலை 8.24 மணிக்கு, சனீஸ்வர பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைவார் என்று கூறப்பட்டுள்ளது. இதே நாளில், திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 29, 2025 அன்று, திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில், சனி பகவான் ராசி மாற்றம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மகா பூஜைகள் மற்றும் வெள்ளிக்கவச அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இருப்பினும், வாக்கிய பஞ்சாங்கக் கணிப்பின்படி, 2026-ம் ஆண்டு மட்டுமே சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்பதால், திருநள்ளாறு கோவிலில் அந்த நாள் மட்டுமே அதிகாரப்பூர்வ விழா நடக்கும் எனவும், முந்தைய தேதி சனி தரிசனம் மட்டுமே நடந்தது எனவும் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மே 23, 2025 – திருநள்ளாறு கோவிலில் கொடியேற்ற விழா
ஜூன் 6, 2025 – திருத்தேரோட்டம் நடைபெற உள்ளதாகவும் சிவாச்சாரியார்கள் அறிவித்துள்ளனர்.
இந்த தகவல்களை வைத்து பக்தர்கள் வழிபாட்டிற்கான திட்டங்களை முன்கூட்டியே அமைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.









