சினிமா
ஆஸ்கர் விழாவையே அலங்கரிக்கப் போகும் ஆர்ஆர்ஆர்.. ராஜமெளலி படத்துக்கு கிடைத்த ராஜ மரியாதை!

95வது அகாடமி விருதுகள் விழா வரும் மார்ச் 12ம் தேதி நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மார்ச் 13ம் தேதி காலை 5.30 மணி முதல் ரெட் கார்ப்பெட் நிகழ்ச்சியுடன் ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
அமீர்கானின் லகான் படத்திற்கு பிறகு எந்தவொரு இந்திய திரைப்படங்களும் ஆஸ்கர் விருது விழாவுக்கு நாமினேட் ஆகாத நிலையில், இந்த முறை ஆவணப்படம், ஆவண குறும்படம் மற்றும் ஆர்ஆர்ஆர் படத்தின் ”நாட்டு நாட்டு” பாடல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

#image_title
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா மற்றும் சமுத்திரகனி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் 1000 கோடிக்கும் அதிகமாக உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்தது.
நாட்டு நாட்டு பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்றுள்ள நிலையில், ஆஸ்கர் விருதையும் வெல்லும் என அதிகமாகவே எதிர்பார்க்கப்படுகிறது.

#image_title
இந்நிலையில், அதை விட பெரிய ராஜ மரியாதையாக ஆஸ்கர் விழா மேடையில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலை பாடிய ராகுல் சிப்லிகுன்ச் மற்றும் கால பைரவா இருவரும் இணைந்து நேரலையாக ஆஸ்கர் விழா மேடையிலேயே இந்த பாடலை பாடி அசத்தப் போகின்றனர்.
அப்படியே ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரை ஸ்டேஜ் ஏற்றி ஆட வைத்தால் இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவை இந்தியர்கள் என்றைக்குமே மறக்கமாட்டார்கள் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சர்வதேச திரைப்படங்கள் மத்தியில் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்துக்கு இப்படியொரு அங்கீகாரம் கிடைத்து இருப்பது ஒட்டுமொத்த இந்திய சினிமா துறைக்கே மிகப்பெரிய பெருமையாக பார்க்கப்படுகிறது.