சினிமா
சிவகுமாரை பிரிந்து மும்பையில் செட்டில் ஆன சூர்யா; பயில்வான் ரங்கநாதன் பகீர் தகவல்

பழம்பெரும் நடிகர் சிவகுமார் தனது இரு மகன்களான சூர்யா மற்றும் கார்த்தியை சினிமாவில் ஹீரோவாக உருவாக்கி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சூர்யா மற்றும் கார்த்தி இதுவரையில் அப்பா அம்மாவுடன் கூட்டுக் குடும்பமாகவே சென்னையில் வாழ்ந்து வந்தனர்.
ஆனால், தற்போது நடிகர் சூர்யா அப்பா சிவகுமாரை பிரிந்து விட்டு தனியாக மும்பையில் சொந்தமாக வீடு வாங்கி குடியேறி உள்ளதாக பயில்வான் ரங்கநாதன் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்து உள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

#image_title
சமீபத்தில் மும்பை விமான நிலைய பார்க்கிங் பிசினஸை கையில் எடுத்த சூர்யாவுக்கு பெரிய லாபம் கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். மேலும், சூரரைப் போற்று இந்தி ரீமேக் படத்திற்கு பிறகு பாலிவுட்டில் தடம் பதிக்க சூர்யாவும் முயற்சித்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
நடிகைகள் நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா மற்றும் சமந்தா உள்ளிட்ட பிரபலங்கள் பாலிவுட் வாய்ப்புகளை தேடிச் செல்வது போல சூர்யாவும் சூர்யா 42 படத்திற்கு பிறகு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி பாலிவுட்டில் பிரம்மாண்ட படங்களில் பிரபாஸ் போல நடிக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

#image_title
ஏற்கனவே மும்பையில், சமந்தா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் பங்களா வாங்கி செட்டில் ஆகி உள்ள நிலையில், தற்போது சூர்யாவும் மும்பையில் வீடு வாங்கி தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் குடியேறி உள்ளார் என பயில்வான் ரங்கநாதன் ஒரே போடாக போட்டுள்ளார். இதில், கொஞ்சம் கூட உண்மையில்லை என்றும் சூர்யா அப்படி செய்ய வாய்ப்பே இல்லை என அவரது ரசிகர்கள் பயில்வான் ரங்கநாதனை விளாசி வருகின்றனர்.