இந்தியா
நிச்சயிக்கப்பட்ட மணமகனின் கழுத்தை அறுத்தது ஏன்? மணப்பெண் அதிர்ச்சி வாக்குமூலம்

நிச்சயிக்கப்பட்ட மணமகனின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றது ஏன் என்பது குறித்து மணமகள் வாக்குமூலம் அளித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் பி.எச்.டி மாணவி புஷ்பா என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி கொண்டாடலாம் என நிச்சயிக்கப்பட்ட மணமகனை புஷ்பா மலைப் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது சர்ப்ரைஸ் கொடுக்கிறேன் என கூறி தனது துப்பட்டாவால் ராமகிருஷ்ணனின் கண்ணை கட்டினார். அதன் பிறகு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென ராமகிருஷ்ணா கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார் .
இதனை அடுத்து உயிருக்காக துடி துடித்துக் கொண்டிருந்த ராமகிருஷ்ணாவை அவரே தனது ஸ்கூட்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவமனையில் தவறி விழுந்ததாக புஷ்பா கூறியதை நம்பாத மருத்துவர்கள் சந்தேகமடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர் .
காவல்துறையினர் விரைந்து வந்து புஷ்பாவை விசாரணை செய்தபோது எனக்கு கணவராக போகிற ராமகிருஷ்ணனின் கழுத்தை அறுத்து கொலை செய்தய முயற்சித்ததை ஒப்புக்கொண்டார். தான் பிரம்மகுமாரிகள் சமாஜத்தில் இணைந்து துறவியாக வாழ திட்டமிட்டிருந்ததாகவும் தனக்கு திருமணத்தில் இஷ்டமில்லை என்றும் ஆனால் தன்னுடைய பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க முயன்றதால் மகனை கொன்று விட்டால் திருமணம் நின்று விடும் என்ற திட்டமிட்டு இதை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.