Connect with us

இந்தியா

இதுதான் நான் கொடுத்த முழு பேட்டி: ராமர் யார் என்றே தெரியாது என கூறிய ஜோதிமணி எம்பி டுவிட்!

Published

on

By

ராமர் யார் என்றே தெரியாது என்று கூறிய ஜோதிமணி எம்பி, அந்த பேட்டி 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் கொடுத்த பேட்டி என்றும், அதனை வைரலாக்கிய தமிழக பாஜகவுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த பேட்டியின் முழுமையான வடிவம் இதுதான் என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டி இதோ:

ஜோதிமணி: நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன். எனக்கு ராமரைத் தெரியாதுதான். நாங்கள் இந்த மண்ணின் பூர்வ குடிகள். நாங்கள் எங்கள் மூதாதையாரை வணங்கும் வழக்கம் கொண்டவர்கள். நீங்கள் தமிழ்நாட்டில் யாரை வேண்டுமானாலும் கேளுங்கள்.

எங்கள் ஊரில் ராமர் கோயில்கள் கிடையாது. நான் வாரா வாரம் வழிபடப் போகும் கோயில் எங்கள் குலசாமி, மூதாதையாருடையது. இதே போல வடகிழக்கு மாநில மக்கள், ஆதி குடிகள், பட்டியலினத்தவர், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் எல்லாருமே தத்தமது இனத்து வழிபாட்டு முறைகளைத்தான் பின்பற்றுகிறார்கள்.

நான் ராமாயணம்,மகாபாரதம் எல்லாம் படித்திருக்கிறேன்.ஆனால் ராமரை வழிபடும் வழக்கம் எங்களிடம் இல்லை. தேசிய அரசியலுக்கு வரும் வரை இது குறித்து யோசிக்க வேண்டிய அவசியமே கூட எங்களுக்கு இருக்கவில்லை.

நிருபர்: அதெல்லாம் சரிதான். ஆனால் அதற்காக அடுத்தவர் வழிபடும் ஒரு கடவுளின் இருப்பையே கேள்விக்குள்ளாக்க முடியுமா?

ஜோதிமணி: அப்படியெல்லாம் செய்யவில்லை. சொல்லப் போனால் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை என்று மன்மோகன் சிங் சொல்லவே இல்லை. அவர் சொன்னதெல்லாம் இதுதான்: யாருக்கெல்லாம் பொருளாதார வளர்ச்சியில் பங்கு கிடைக்கவில்லையோ, அவர்கள் முஸ்லிமோ, தலித்தோ, ஆதிகுடியோ அவர்களுக்கு தேச வளங்களில் முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்றுதான் பேசி இருக்கிறார். முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரமும் இதையே வேறு வகையில் குறிப்பிட்டுப் பேசி இருக்கிறார்:

என்னிடம் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஒன்று நன்றாக சாப்பிட்டு செழிப்பாக இருக்கிறது; இன்னொன்று நோஞ்சனாக உள்ளது. நான் என் உணவை நோஞ்சான் பிள்ளைக்குத்தான் கொஞ்சம் அதிகமாக சேர்த்துக் கொடுப்பேன். அப்போதுதான் இரண்டு பிள்ளைகளும் சமமாக வளரும், என்றார். அதைத்தான் மன்மோகன் சிங் சொன்னார். பெண்களாகிய நாம் ஏன் அரசியல் இட ஒதுக்கீடு கேட்கிறோம்? காரணம் நாம் அதிகாரமின்றி இருக்கிறோம். எனவே நமக்கு இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது…

நிருபர்: இப்போது இன்றைய அரசியல் விவாதங்களை பாஜகதான் தீர்மானிக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

தேசிய கீதத்தை பாட மாட்டேன் என்றவர்கள் இப்போது பாடிக் கொண்டிருக்கிறார்கள். வந்தே மாதரம் கோஷமிட மறுத்தவர்கள் இப்போது இடுகிறார்கள்…

ஜோதிமணி: இதையெல்லாம் நிஜமாகத்தான் சொல்கிறீர்களா? எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து காங்கிரஸ் கூட்டங்களில் நாங்கள் பாடிக்கொண்டு இருக்கிறோம். வந்தே மாதரம் கோஷமித்துக் கொண்டுதான் இருக்கிறோம். தமிழ்நாட்டிலேயே எங்கள் காங்கிரஸ் கூட்டங்கள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கி தேசிய கீதத்தில்தான் முடியும். இதெல்லாமே பாஜக பரப்பும் ஆதாரமற்ற பொய்கள்தான்.

நிருபர்: கடைசியாக, நீங்கள் இந்து மதத்துக்கு ஆதரவாக இருக்கிறீர்கள். இந்துத்துவத்துக்கு எதிராக உள்ளீர்கள்; அவ்வளவுதானே?

ஜோதிமணி: நான் உண்மையான இந்து எனில் நான் இந்துத்துவத்துக்கு எதிராகத்தான் இருக்க வேண்டும். காரணம், அவர்கள் இந்து மதத்தை தவறாக பிம்பப்படுத்துகிறார்கள். இந்து மதத்துக்கு கெட்ட பெயர் வாங்கித் தர முயல்கிறார்கள். எனவே ஒவ்வொரு இந்துவின் கடமையும் பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் முன்னெடுக்கும் இந்துத்துவத்தை எதிர்ப்பதாக மட்டுமே இருக்க வேண்டும்.

நிருபர்: நன்றி

 

இந்தியா4 mins ago

மங்களூரு மசூதிக்குள்ளும் இந்து கோவிலா? பதட்டத்தை தணிக்க 144 தடை!

தமிழ்நாடு11 mins ago

அடுத்த கல்வியாண்டு பள்ளிகள் திறப்பு மற்றும் பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

சினிமா செய்திகள்16 mins ago

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்திற்கு உதவி செய்த சிவகார்த்திகேயன்!

வணிகம்4 hours ago

சென்னையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு!

சினிமா செய்திகள்4 hours ago

விஜய்-அட்லி இணையும் அடுத்த படம் ’பிகில்’ இரண்டாம் பாகமா?

இந்தியா4 hours ago

இறுதிப்போட்டிக்கு தகுதி: சில மணி நேரங்களில் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதும் பிரக்ஞானந்தா

இந்தியா4 hours ago

அம்பேத்கார் பெயர் வைத்ததால் ஆத்திரம்: அமைச்சரின் வீட்டையே கொளுத்திய பொதுமக்கள்!

தமிழ்நாடு18 hours ago

சென்னை, செங்கல்பட்டு பகுதியில் திடீரென அதிகரித்த கொரோனா

கிரிக்கெட்18 hours ago

நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்வது யார்? குஜராத், ராஜஸ்தான் அணி வீரர்கள் விபரங்கள்!

சினிமா செய்திகள்18 hours ago

‘தி க்ரே மேன்’ டிரைலர் ரிலீஸ்: தனுஷை சல்லடை போட்டு தேடும் ரசிகர்கள்

கிரிக்கெட்7 days ago

ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென விலகும் கேன் வில்லியம்சன்: என்ன காரணம்?

சினிமா செய்திகள்4 days ago

நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பிராமண அவதூறு: காயத்ரி ரகுராம்

கிரிக்கெட்7 days ago

210 ரன்கள் எடுத்த லக்னோவுக்கு மரண பயத்தை காட்டிய கொல்கத்தா!

கிரிக்கெட்5 days ago

பந்தை விட வேகமாக பறந்த பேட்: ஹர்திக் பாண்ட்யா குறித்து வர்ணனையாளர்!

இந்தியா6 days ago

2வது கணவனை கழட்டிவிட முதல் கணவரின் மகனை திருமணம் செய்த பெண்: அதிர்ச்சி தகவல்

சினிமா செய்திகள்4 days ago

எனக்கும் புதிதாக வந்த இரண்டு மகள்கள்: டி இமானின் முன்னாள் மனைவி பதிலடி!

சினிமா செய்திகள்7 days ago

விடுமுறை நாளில் வெளியாகும் கார்த்தியின் ‘விருமன்’ திரைப்படம்!

இந்தியா5 days ago

ஐதராபாத் என்கவுன்ட்டர் போலியானது: 10 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய பரிந்துரை!

சினிமா செய்திகள்5 days ago

அஜித், விஜய் சம்பளத்தை நெருங்கிய விஜய்சேதுபதி – சிவகார்த்திகேயன்!

தமிழ்நாடு3 days ago

மனைவிக்கு குழந்தை பிறந்ததாக மகிழ்ச்சியுடன் சாக்லேட் கொடுத்த கணவர் மீது பாய்ந்தது போக்சோ!