இந்தியா
பதஞ்சலியின் யோகா ஆன்லைன் கூட்டத்தில் ஆபாச படம்: அலறியடித்து ஓடிய பெண்கள்

பதஞ்சலியின் ஆன்லைன் யோகா கூட்டம் ஒவ்வொரு மாதமும் உலக அளவிலான வாடிக்கையாளர்களுடன் நடந்து வரும் நிலையில் திடீரென அதில் ஆபாச படம் ஒளிபரப்பானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பிரபல யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ் உலக அளவில் உள்ள மக்களுக்கு ஆன்லைன் மூலம் யோகா வகுப்பை நடத்தி வருகிறார் என்பதும் இந்த வகுப்பில் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஆன்லைன் கூட்டம் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் யோகா சம்பந்தமான கேள்விகளுக்கு யோகா நிபுணர்கள் பதிலளிப்பார்கள் என்பதும் இந்த கூட்டம் சுவராசியமாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென திரையில் ஆபாச படம் ஓடியதால் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கூட்டத்தின் போது மர்ம நபர் ஒருவர் ஆபாச படத்தை ஒளிபரப்பிய தாக தெரிகிறது.
இதனை அடுத்து பதஞ்சலி நிர்வாகத்தினர் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து கலந்துகொண்ட ஒரு இளைஞர் தான் கூட்டத்தின்போது திடீரென ஆபாச படத்தை ஒளிபரப்பியது தெரிகிறது. அவர் தற்செயலாக இந்த படத்தை ஒளிபரப்பினாரா? அல்லது வேண்டுமென்றே ஒளிபரப்பினாரா? என்பது குறித்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
யோகா குறித்த ஆன்லைன் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென ஆபாசபடம் தோன்றியதால் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உலக அளவில் இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஆபாசபடம் ஒளிபரப்பப்பட்டதால் பதஞ்சலி யோகா நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


















