Connect with us

வேலைவாய்ப்பு

புதுச்சேரி காவல்துறை வேலைவாய்ப்பு 2025 : 70 சப்-இன்ஸ்பெக்டர், 148 காவலர் பணியிடங்கள் – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

Published

on

புதுச்சேரி காவல்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 70 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 148 காவலர் பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன.

இதில், சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களில் 23 பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காவலர் பணியிடங்களில் 100 ஆண்கள் மற்றும் 48 பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த தகுதியான ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 12, 2025, மாலை 3 மணி ஆகும். விண்ணப்பதாரர்கள் https://recruitment.py.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி:

  • சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.

  • காவலர் பதவிக்கு: பிளஸ்-2 அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:
முதலில் உடல்தகுதி தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இடஒதுக்கீடு, வயது வரம்பு, உடல் தகுதி சான்றுகள் போன்ற விரிவான விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான முந்தைய அறிவிப்பில் (08.11.2022) விண்ணப்பித்தவர்களுக்கு தொடர்பான தகவல்கள் பின்னர் அரசு இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
Clay vs concrete roof tiles : complete comparison for cost, durability & style commercial & residential roof contractor clark roofing.