சினிமா செய்திகள்
உறுதியானது சாஹோ ரிலீஸ் தேதி!

பாகுபலி நாயகன் பிரபாஸின் அடுத்த பிரம்மாண்டத்திற்காக உலகமே காத்திருக்கிறது. பிரபாஸ் நடிப்பில் டோலிவுட் மற்றும் பாலிவுட் கலவையாக உருவாகியுள்ள சாஹோ படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சுஜித் இயக்கத்தில் 300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சாஹோ படம் வரும் சுதந்திர தின கொண்டாட்டமாக ரிலீசாகிறது.
இந்த படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். மேலும், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் மற்றும் ஜாக்கி ஷெராஃப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் இந்த படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படத்தின் புது போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு வைரலாக்கியுள்ளது.














