Connect with us

செய்திகள்

பொங்கல் 2026 சிறப்பு பரிசு: அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.750 மதிப்புள்ள தொகுப்பு வழங்க அறிவிப்பு!

Published

on

2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி அரசு அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் ரூ.750 மதிப்புள்ள சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் இந்த நலத்திட்டத்தின் பயன்களை பெற முடியும்.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பில், பச்சரிசி, நாட்டு சர்க்கரை, பாசி பருப்பு, நெய் மற்றும் சூரிய காந்தி எண்ணெய் ஆகிய ஐந்து அத்தியாவசிய பொருட்கள் இடம்பெற உள்ளன. பொதுமக்கள் நேரடியாக பயன்படுத்தும் வகையில் தரமான பொருட்கள் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்த பரிசு தொகுப்பு விநியோகம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும், அனைத்து நியாய விலை கடைகள் (ரேஷன் கடைகள்) மூலம் விநியோகிக்கப்படும் என்றும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் திருவிழா காலத்தில் பொதுமக்களுக்கு பொருளாதார உதவி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
Waco temple killeen.