தமிழ்நாடு
சாக்கடையில் இறங்கி அடைப்பு எடுத்த முதல்வர்!

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இதன் முதல்வராக உள்ள நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இவர் இன்று காலை தனது சொந்த தொகுதியான நெல்லித்தோப்பு பகுதிக்கு சென்றார்.
அப்போது நெல்லித்தோப்பு மார்க்கெட் அருகேயுள்ள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை கவனித்த முதல்வர் நாராயணசாமி அந்த சாக்கடையில் இறங்கி குப்பைகளை அகற்றி தேங்கி நின்ற கழிவுநீரை அகற்றினார்.
ஒரு முதல்வரே சாக்கடை என்று கூட பார்க்காமல் அதில் இறங்கி சுத்தம் செய்த சம்பவம் அங்குள்ள மக்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்படுகிறது.













