உலகம்
அரசியல்வாதிகள் மீது பாலியல் புகார் எழுப்பிய டென்னிஸ் வீராங்கனை திடீர் மாயம்!

அரசியல்வாதிகள் மீது பாலியல் புகார்கள் எழுப்பிய டென்னிஸ் வீராங்கனை ஒருவர் திடீரென கடந்த சில நாட்களாக மாயமாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசியல்வாதிகள் மீது பாலியல் புகார் எழுப்பினார். இந்த புகார் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியில் செல்வாக்காக இருந்து வருபவரான ஜாங் ஜி ஓர்லி மீது டென்னிஸ் வீராங்கனை பாலியல் புகார் தெரிவித்ததை அடுத்து எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சனையை பெரிதாக்கின.
முன்னாள் துணை அதிபர் ஜாங் ஜி ஓர்லி தன்னை பல ஆண்டுகளாக பலவந்தமாக பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் பல கொடுமைகள் செய்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அரசியல்வாதிகள் மீது பாலியல் புகார் கூறிய சீன வீராங்கனை பெங் ஷுவாய் திடீர் என தற்போது மாயமாகி உள்ளதாக தெரிகிறது. அவருடைய நிலை என்ன ஆனது என்பது குறித்து சக வீராங்கனைகள் மற்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பெங் ஷுவாய் நலமுடன் இருக்க வேண்டும் என பிரார்த்திப்பதாக உலகில் உள்ள பிரபலமான டென்னிஸ் வீராங்கனைகள் சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.











