சினிமா செய்திகள்
‘வெல்கம் பேக் ஓவியா’- நடிகை ஓவியாவின் புதிய பட டீசர்..!

பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா புதிய மலையாள திரைப்படம் ஒன்றின் மூலம் மீண்டும் களம் இறங்குகிறார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. தமிழில் களவாணி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் தமிகத்தின் வீடுதோறும் சென்றடைந்து பெண்களையும் கவர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பெரிய வாய்ப்பு அமையவில்லை என்றாலும் அவ்வப்போது சில படங்களில் தலைகாட்டி வந்தார்.
தற்போது மலையாளத்தில் ‘ப்ளாக் காஃபி’ திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. நடிகர்கள் லால், சன்னி வேன், ஸ்வேதா மோஹன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகர் பாபுராஜ் இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.