தமிழ்நாடு
பிரதமர் மோடிக்கு நான் ஆதரவாக இருப்பேன்: ஓ.பி.ரவீந்திரநாத் பரபரப்பு பேட்டி!

அதிமுக சார்பில் மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற ஒரேஒரு எம்பியான ஓ.பி.ரவீந்திரநாத், நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு நான் ஆதரவாக இருப்பேன் என கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுக எம்பி ரவீந்திரநாத், அப்போது நாடாளுமன்றத்துக்கு சென்று முதல் கூட்டத் தொடர் எவ்வாறு இருந்தது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பிரதமர் மோடி சிறப்பான இந்தியாவை, புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். அதற்கான முயற்சியாக இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் சிறப்பாக அமைந்தது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நாடாளுமன்ற கூட்டத் தொடர் இது. மற்ற மாநில எம்பிக்கள் எனக்கு சக எம்பி என்கிற முறையில் மரியாதை கொடுத்து நல்ல நண்பர்களாகப் பழகுகிறார்கள் என்றார். தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உங்களது பேச்சுகள் எல்லாம் பாஜகவை முழுமூச்சாக ஆதரிப்பது போலவே உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், பாஜகவுக்கு என்றில்லை, நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு நான் ஆதரவாக இருப்பேன். நீட் விவகாரம் பற்றி பேசியபோது, நீட் விவகாரம் பற்றி தமிழக அரசின் நிலைமையை, தமிழக முதல்வரின் கோரிக்கையை நான் நாடாளுமன்றத்தில் பிரதிபலித்தேன் என்றார்.




















