தமிழ்நாடு
‘அதிமுக திட்டங்களை நிறுத்தும் எண்ணம் முதல்வருக்கு இல்லை!’

கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த காரணத்திற்காகவே அந்த திட்டங்களை நிறுத்தும் எண்ணம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை என்று கூறியுள்ளார் அமைச்சர் கே.என்.நேரு.
இது பற்றி அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, ‘மு.க.ஸ்டாலினைப் போல பெருந்தன்மையோடு ஆட்சி நடத்தும் முதல்வர் யாரும் கிடையாது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட எந்த திட்டமும் தற்போது வரை நிறுத்தப்படவில்லை. அவர்கள் அரசு சங்கங்களில் வகிக்கும் பதவிகளைக் கூட இன்னும் அவர் ரத்து செய்யவில்லை.

எனவே அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காரணத்திற்காகவே ஒரு திட்டத்தை கைவிட வேண்டும், அல்லது ரத்து செய்து கிடப்பில் போட வேண்டும் என்கிற எண்ணம் துளியும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இல்லை’ என்று உறுதி பட கூறியுள்ளார் நேரு.
முன்னர் நடந்த ஆட்சிகளில் தமிழ்நாடு முதல்வராக ஜெயலலிதா வந்தாலும், கருணாநிதி வந்தாலும் முன்னர் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் கைவிடப்படும் அல்லது திட்டங்களுக்கான பெயர்கள் மாற்றியமைக்கப்படும் அரசியல் வழக்கம் இருந்தது. ஆனால் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து அப்படி நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

















