இந்தியா
புதிய என்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது: ஏ.ஐ.சி.டி.இ. அறிவிப்பு!
Published
10 months agoon
By
Shiva
நாடு முழுவதும் 2024 ஆம் ஆண்டு வரை புதிய என்ஜினீயரிங் கல்லூரிக்கு அனுமதி கிடையாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்ஜினியரிங் கல்லூரிகளின் தற்போதைய போக்கு, குறைவான மாணவர் சேர்க்கை, இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு ஆகியவை குறித்து ஆராய அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் குழு அமைத்தது.
இந்த குழு தெரிவித்த பரிந்துரையின் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு வரை புதிய இன்ஜினியரிங் கல்லூரி அமைப்பதற்கான தடையை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதித்துள்ளது.
மேலும் 95% முதல் 100 சதவீத மாணவர்கள் சேர்க்கை உள்ள நிறுவனங்களில் 25% கூடுதல் திறனையும், 80 சதவீதம் முதல் 95 சதவீதம் வரை மாணவர் சேர்க்கை உள்ள நிறுவனங்களில் 15% கூடுதல் திறனையும் அனுமதித்து ஏ.ஐ.சி.டி.இ அறிவித்துள்ளது.
மேலும் முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் இருந்து வெளியேறும் மாணவர்கள் இளநிலை சான்றிதழையும், 2-ம் ஆண்டில் வெளியேறும் மாணவர்கள் இளநிலை டிப்ளமோ மற்றும் 3-ம் ஆண்டில் வெளியே செல்லும் மாணவர்கள் இளநிலை தொழிற்கல்வி சான்றிதழையும் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
You may like
நான் மட்டும் கல்லூரியில் படித்திருந்தால்..? மாணவர்கள் மத்தியில் பேசிய கெளதம் அதானி!
சென்னை உள்பட 10 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: அதிரடி அறிவிப்பு!
இந்திய உணவுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்!
24 மணி நேரமும் கடைகள் திறக்கலாம்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
நடுரோட்டில் கல்லூரி மாணவிக்கு வலுக்கட்டாயமாக கொடுக்கப்பட்ட விஷம்: அதிர்ச்சி தகவல்