வணிகம்
இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம் இல்லை – தற்போதைய விலை நிலவரம் இதோ!

இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம் இல்லை – தற்போதைய விலை நிலவரம் இதோ..!
இலங்கையில் மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்தின் கீழ், மே 31ஆம் தேதி விலை மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்டுள்ள அறிவிப்பில், இம்முறை எரிபொருள் விலை மாற்றம் மேற்கொள்ளப்படாது என தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், தற்போதைய எரிபொருள் விலைகள் கீழேவிடமாகவே தொடரும்:
ஒக்டேன் 92 பெட்ரோல் – ரூ.293 ரூபாய் (லீற்றருக்கு)
ஒக்டேன் 95 பெட்ரோல் – ரூ.341 ரூபாய் (லீற்றருக்கு)
ஒட்டோ டீசல் – ரூ.274 ரூபாய் (லீற்றருக்கு)
சுப்பர் டீசல் – ரூ.325 ரூபாய் (லீற்றருக்கு)
எரிபொருள் விலை மீண்டும் எப்போது திருத்தம் செய்யப்படும் என்பது பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.















