Connect with us

இந்தியா

ஹிஜாப் விவகாரம் – கர்நாடக உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு…..

Published

on

girl

கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததை அடுத்து பெரும் பதட்டம் ஏற்பட்டது. அந்த மாணவிகள் கல்லூரிகள் அனுமதிக்கப்படாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, கல்லூரி மாணவர்களின் போர்வையில் அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் காவி துண்டை அணிந்து கல்லூரிகளுக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்வதாக சமூகவலைத்தளங்களில் புகார் எழுந்தது.

மேலும், கர்நாடகாவை சேர்ந்த பாஜகவினர் இதை கையில் எடுத்து அரசியல் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், கல்லூரி மாணவர்களை தூண்டிவிட்டு ஹிஜாப் கல்லூரிகளில் ஆர்ப்பாட்டம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.

ஹிஜாப் அணிந்து வந்த ஒரு கல்லூரி பெண்ணின் அருகில் சென்று பலர் ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’ என முழங்கினர். ஆனாலும் அந்த மாணவி அஞ்சவில்லை. மேலும், அவர்களை எதிர்க்கும் விதமாக ‘அல்லாஹு அக்பர்’ என முழங்கினார். தனக்கு எதிராக அத்தனை பேர் இருந்தும் அவர் அஞ்சவில்லை. சிங்கப்பெண்ணாக எதிர்ப்பை தெரிவித்து நெட்டிசன்களின் பாராட்டை பெற்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதன் பின்னரே இந்த விவகாரம் சூடு பிடித்தது.

ஒருபக்கம், ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை என மாணவர்கள் தொடர்ந்த வழக்கு சமீபத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பள்ளி கல்லூரிகளில் உள்ள சீருடை திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஆனால் அதே நேரத்தில் ஹிஜாப் அணிவது குறித்த விசாரணையை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தனர்.

இதில் தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் கல்லூரிகளுக்கு அணிந்து செல்ல தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த வழக்கு விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?